• Thu. Nov 23rd, 2023

வூஹான் கவிதைகள்

ByGouthama Siddarthan

May 14, 2023

 

வூஹான் கவிதைகள்
சியோங்  மேன், ஹுவாங் பின், ஹுவா ஸி, ஜாங் ஜிஹாவோ.

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி, கெர்ரி ஷான் கீஸ், நீல் ஐட்கென்.

தமிழாக்கம் : கௌதம சித்தார்த்தன்

 

Wuhan Poems

Xiong Man, Huang Bin, Hua Zi, Zhang Zhihao.

Translation from Chinese to English : Ming Di, Kerry Shawn Keys, Neil Aitken.
Tamil translation : Gouthama Siddarthan

 

***************

வரலாற்றுச் சாட்சியமாக கவிதை.
அநீதியை கேள்விக்குள்ளாக்கும் அறிக்கைகளாக கவிதை.
நாட்குறிப்புகளாக கவிதை.
தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் மற்றவர்கள் மீது கனிவு காட்டவுமான கவிதை.
சுய ஆரோக்கியம் பேணல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளுக்கான கவிதை.

2020 ஜனவரியில், வுஹானில் COVID-19 பெரிய அளவில் வெடித்தபோது, கவிதைகள் இருந்தன. ஜனவரி 23 ஆம் தேதி நகரம் பூட்டப்பட்டவுடன் பலரும் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டனர், கொரோனா வைரஸ் நாட்டில் உள்ள அனைவரையும் போல. Hua Zi,  Wei Tianwu ஆகியோர் ஒரு கவிதை நாட்குறிப்பை நிர்வகித்தனர், Zhang Zhihao 25 க்கும் மேற்பட்ட கவிதைகளை  தனது ஊரடங்கு நாட்குறிப்பில் எழுதினார், Chen He பல கொரோனா கவிதைகளை சேகரித்து தனது இணைய தளத்தில் வெளியிட்டார், யாங்சே கவிதை வெளியீட்டு மையம், மற்றும்  Yu Xiaozhong இந்த கவிதைகளில் பலவற்றை ஹூபே வானொலியில் அறிமுகப்படுத்தினர்.

Xiao Yin போன்ற பல கவிஞர்கள் இந்த முன்னர் எப்போதும் சம்பவித்திராத நெருக்கடியைப் பற்றி கவிதை எழுத வேண்டாம் என்று முடிவு செய்தனர், ஆனால் அவரது வுஹான் டைரி நாடு முழுவதிலுமிருந்து முன்பை விட அதிகமான வாசகர்களை ஈர்த்தது; அவரது நாட்குறிப்பு கவிதைகளை விட தகவலறிந்ததாகவும், ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருந்தது.

இந்த தொற்றின் போது எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களிலும், Huang Bin கவிதை வரிசை மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்தது; அவர் தனது குடும்ப உறுப்பினர்களில் இருவர் கொரோனா வைரஸால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்களில் ஒருவர் பிப்ரவரி 22 அன்று இறந்தார் என்பது பற்றியெல்லாம் எழுதினார்; குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதால் அவரது வீடு முன் கதவு பூட்டப்பட்டிருப்பது எப்படி; மற்றும் அவர் குடும்ப இறப்புகளை எவ்வாறு எதிர்கொண்டார் மற்றும் மருத்துவமனை படுக்கையைப் பாதுகாக்க முடியாமல் போனது போன்ற அனைத்து சிரமங்களையும் எதிர்கொண்ட விதம் குறித்தெல்லாம், “உலகம் என் மீது சரிந்தது” என்று அவர் எழுதினார், ஆனால் கொடுமையான அனைத்து விஷயங்களையும் மென்மையாக, அமைதியான தொனியில் கூறினார்.

இன்னும், சொல்லப்படாத மோசமான கதைகள் உள்ளன.

அதிகாரபூர்வ ஊடகங்கள் மற்றும் / அல்லது தனிப்பட்ட வலைப்பதிவுகள் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான பகுதிகளிலிருந்து பின்வரும் ஏழு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை வுஹானின் பல்வேறு கவிதைகளின் குரல்களைக் குறிக்கின்றன. (Liu Jiemin, Li Jianchunபோன்ற பல கவிஞர்களும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கவிதை நாட்குறிப்பை வைத்திருக்கிறார்கள், இந்த நேரத்தில் குறைந்த இடைவெளி காரணமாக எதிர்காலத்தில் அதன் படைப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.)

உலகம் பிளவுபட்டு, வீழ்ச்சியடையும் போது, பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் மற்றும் மொழிகளில் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க இந்தக் கவிதையின் துடிப்புகள் உதவும்.

*******************

சியோங்  மேன்  (Xiong Man)
இந்த நகரத்தில் ஒலி முடக்கப்பட்டுள்ளது

யாங்சே ஆற்றின் மீது பறக்கும் பறவைகளின் மந்தை
மீண்டும் மீண்டும், தரையிறங்க மறுக்கிறது
ஆற்றில் ரோந்து செல்லும் நகரத்தின் அதிகாரிகள் போல.
ஆனால் அவை, கப்பல்களின் விசில் ஒலி  எழுப்பும்
தங்கள் சகாக்களை இழந்துவிட்டன

நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் சாம்பலித்து
*பிரெஞ்சுக் காணியின் அங்கமாய்
நதிக் கரையோரம் நிற்கின்றன,
பழைய திரைப்படத்தின் ஒரு காட்சியைப் போல
அதில் யாரோ ஒருவர் நடந்து சென்று தெருவில் விழுகிறார்.

ஒரு சில வெண்ணிறப் பெண்கள் அழுகிறார்கள்
அந்தக் கட்டிடங்களில் ஒன்றில்.
அவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள்
மனைவிகள் மற்றும் மகள்கள்.. யாருமற்றவர்கள்
அவர்களது கண்ணீர் துடைக்க யாரும் இல்லை.

சூறையின் இருண்ட சுழல்வு போல
சாளரங்களில் அளைகிறது காற்று
அங்கிருந்து வெளியே பார்க்க
விழிகள் இல்லை
செவிகளும் இல்லை, வெளியில் இருப்பதைக் கேட்க.

(27.1.2020)

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி (Ming Di)

சியோங் மேன் (Xiong Man : 1986-) ஹூபே மாகாணத்தின் ஹுவாங்காங்கைச் சேர்ந்தவர். வுஹானில் வசிக்கும் இவர் Chinese Poetry   என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிகிறார். பிப்ரவரி தொடக்கத்தில் The Paper என்னும் பத்திரிகையில் இருந்து பேட்டி கண்ட முதல் கவிஞர்களில் இவரும் ஒருவர், அவரின் இந்த கவிதை அவரது நேர்காணலுடன் வெளியிடப்பட்டது

* French Concession  – 1849 ஆம் ஆண்டு பிரெஞ்சு சலுகை என்னும் ஒப்பந்தம் நிறுவப்பட்டது.  சீனாவில் பிரெஞ்சு குடியேற்றத்திற்கான சில பிரதேசங்களை ஒப்புக்கொள்ளும் ஷரத்துகள் கொண்ட ஒப்பந்தம் அது.  1943 ஆம் ஆண்டில் ஜெர்மன் அழுத்தத்தின் கீழ் பிரெஞ்சு அரசு, ஜப்பானிய சார்பு மறுசீரமைக்கப்பட்ட தேசிய சீன அரசாங்கத்திடம் கையெழுத்திட்டபோது இந்த சலுகை முடிவுக்கு வந்தது.

***********************

ஹுவாங் பின் (Huang Bin)
மயானப் பறவை (GRAVEYARD BIRD)

மார்ச் 10

கடந்த ஒன்றரை மாதங்களாகட்வீட் டிக் கொண்டிருந்த  கதிர்க்குருவி
எங்கேயோ பறந்துவிட்டதுஎங்களை விட்டு.ஒன்றரை மாதமாக, நான் அதன் குரலைக் கேட்ட போதெல்லாம்அதன் ட்வீக் ஒலி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது அதிகாலை முதல் சாயங்காலம் வரை
நான் சுதந்திரமாக உணர்ந்தேன், க்வீக் க்வீக் பச்சை மண்ணின் இலகுவுடன் என் உடல். அதன் தெளிவான ஒலி முடிவற்ற கண்ணிகளாக
புதிய சாளரத்தைத் திறக்கிறது,
என் உலகின் புதிய பரிமாணத்தையும்ஒருவேளை அது ஒரு ஆவியுருவாக இருக்கக்கூடும் தனிமையாக பயணம் செய்வது, மலைகளில் ஒளிந்து கொள்வது
புதர்கள் சூழ்ந்த கல்லறைகளில்
அது மலைகளின் ஆழமான அமைதியை விரும்புகிறதுமனிதன் சேருமிடத்தை உணர்த்தும் பரிவுடன் மண் குன்றுகளுக்கு திரும்பும்அதன் கூவலில் ஒலிக்கும் மகிமையின் வேர்ச் சொல்லை இதற்கு முன்பு தேடியிருக்கிறேன்.ஆனால்,  அதை கதிர் குருவி என்றழைக்கப் பழகிவிட்டேன்    பாய் ஜூயியின் கவிதைகளுடன் தொடர்புபடுத்த இது எனக்கு உதவுகிறது
நான் அதை ஒரு பட்டாணி குருவி என்று கூட அழைக்கிறேன்
இது ஒரு ஏகாந்தமான புனைப்பெயர்
இந்த சமூகத்தில் நான் வாழ்ந்த இந்த ஆண்டுகளில்
அதன் ட்வீட்டை நான் கேட்டது இதுவே முதல் முறைஅது மலைகளில் ஒரு வீட்டைக் கொண்டிருக்க வேண்டும் இறந்தவர்களின் ஆன்மாக்களை உள்வாங்கி ஒலிக்கிறது அது.

2020.3.

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி, நீல் ஐட்கென் (Ming Di and Neil Aitken)

ஹுவாங் பின் (Huang Bin : 1968-) தென்கிழக்கு ஹூபேயில் உள்ள ரெட்க்ளிஃப் என்ற இடத்தில் பிறந்தார், இது புகழ்பெற்ற மூன்று ராஜ்ய வம்சப் போர் நடந்த, நன்கு அறியப்பட்ட வரலாற்று இடமாகும். இவர், வுஹான் பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியலில் பட்டம் பெற்றவர். இவரது கவிதை,, 1994 இல் தேசிய கவிதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றது, மேலும் ஹூபே டெய்லி இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றும் போது தொடர்ந்து அவர் எழுதிய கவிதைகள், ஹூபேயில் ஒன்பதாவது கியூ யுவான் இலக்கிய மற்றும் கலை விருதைப் பெற்றன. அவரது குடும்ப உறுப்பினர்களில் இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் பிப்ரவரி 22 அன்று காலமானார். இந்த கவிதை அவரது,  இறப்பு சார்ந்த துயர்மிகு கவிதை வரிசையில் இருந்து எடுக்கப்பட்டது.

***************

ஹுவா ஸி  (Hua Zi)
பூட்டப்பட்ட சமூகம் (COMMUNITY LOCKDOWN)

நகரத்தைப்  பூட்டுதல்
கிராமங்களைப் பூட்டுதல்
தெருக்களைப் பூட்டுதல்
கதவுகளைப் பூட்டுதல்
சமூக வாயில்களைப் பூட்டுதல்
மற்றும் கதவுகளைப்  பூட்டுதல்.
உன் கதவைப் பூட்டுதல், என் கதவைப் பூட்டுதல்,
மற்றும் அனைத்து கதவுகளையும் இழுத்துப் பூட்டுதல்
வாய்களுக்கு சீல் வைப்பதற்காகவா?

சத்தியம் வாயிலிருந்து வெடிக்குமா,
அவை இறுக்கமாக சீலிடப்பட்டிருக்கும்போது?
நீங்கள் இறந்த பிறகு உண்மையில் சுவாசிக்க முடியுமா? *
நான் ஒளியின் ஒரு கற்றையை மட்டுமே விரும்புகிறேன்
சூரியனில் இருந்து வரும் ஒளிக் கற்றையை
சந்திரனில் இருந்து வரும் ஒளிக் கற்றையை
கடவுள் சொல்லும்போது, ஒளியிலிருந்து உண்டாகிய ஒளிக்கற்றைகள்
வெளிச்சத்தையும் சத்தியத்தையும் கொண்டு வரும்

நான் பழைய மரத்தைப் போல
தாழ்வான, ஈரமான நிழல்களில் தங்கியிருக்கிறேன்
என் காலில் பாசிகள் வளரவும்
என் தோள்களில் மரக் காளான்கள் வளர்க்கவும்.

ஆனால் நீங்கள் வித்தியாசமானவர்
நீங்கள் காற்றோடு கலந்து நிற்க வேண்டும்
சூறைக் காற்றாகி கதவை உடைக்கவேண்டும்
உங்கள் தலையில் கொம்புகளை வளர்க்க வேண்டும்
மற்றும் உங்கள் உடலில் முட்களையும்..

17. 2. 2020.
வுஹான் பூட்டுதலின் 26 வது நாள்

* பால் செலான் கவிதையின் ஒரு வரி : “நீங்கள் இப்போது இறந்துவிட்டீர்கள், எனினும் சுவாசிக்க முடியும்”.

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு : மிங் டி (Ming Di)

ஹுவா ஸி (Hua Zi) , ஹூபே மாகாணத்தின் தியானன்மெனில் பிறந்தார், வுஹான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவரது நூல்கள் மூன்று கவிதைத் தொகுப்புகளாகவும், பல கட்டுரை தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன.. இவர், வுஹானில் ஒரு முக்கிய எழுத்தாளர் ஆவார், மேலும் கியூ யுவான் கலை விருது, பிங் ஜின் புத்தக விருது, சாங்ஜியாங் உரைநடை விருது மற்றும் 2016 சிறந்த பத்து பெண்கள் பட்டியலை உள்ளடக்கிய நூலில் பிரதான இடம் பெறுபவர்.

***************

ஜாங் ஜிஹாவோ (Zhang Zhihao)
ஹன்யாங் நுழை வாயிலுக்கு வசந்தம் வருகிறது (SPRING COMES TO HANYANG GATE)

நான் அடிக்கடி இங்கு வருகிறேன், ஹன்யாங் நுழைவு வாயிலே,
நான் மிகுந்த விரக்தியில் இருக்கும்போதெல்லாம்
வேறு எங்கும் செல்ல மனம் ஒப்பியதில்லை

இப்போதும் முன்பு போலவே,  பலரும் கூடுகிறார்கள்
பாலத்தின் அடியில்  கிழக்கு நோக்கிப் பாயும்
பெரியநதியின் பிரவாகக் காட்சியைக் காண
அலைகளின் ஒலி என்னுள் எதிரொலிக்கிறது
ஆனால் சிலரால்தான் அதைக் கேட்க முடியும்

அந்த சூரியாஸ்தமனத்தில் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல
பார்வையை சுழட்டுகிறேன்

வசந்த காலத்தின் இறுதிச் சுற்று
ஒரு இளம்பெண் தனது முகக்கவசத்தைக் கழற்றுகிறாள்
அவள் கன்னம் ஓய்வெடுக்கிறது
அவளுடைய காதலனின் தோளில்
அவள் எதுவும் சொல்ல விரும்பவில்லை
இப்படி அமைதியாக இருக்க வேண்டும்
அவளுடைய வாழ்நாள் முழுவதும்
பிளம் பூக்கள் உதிர்கின்றன
செண்பகப்பூக்கள் பூக்கின்றன
எங்கள் தலைக்கு மேலே ரயில்கள்பாலத்தைக் கடக்கின்றன
நதி கீழே அலையடிக்கும் போது
இக் காட்சிகள் அசைந்து கொடுக்கின்றன
இதற்கு முன்பான வாழ்க்கையிலும்.

9. 4. 2020

சீன மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு :  மிங் டி மற்றும்

(Ming Di and Kerry Shawn Keys)

வுஹானின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான ஜாங் ஜிஹாவோ (Zhang Zhihao) 1965 ஆம் ஆண்டில் ஹூபே மாகாணத்தின் ஜிங்மேனில் பிறந்தார். 1988 ஆம் ஆண்டில் மத்திய சீனப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்று, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றினார், பின்னர் 2003 இல் வுஹான் எழுத்தாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார். சீனக் கவிதைகளின் காலாண்டு இதழுக்கு நிர்வாக ஆசிரியராக பணியாற்றியுள்ளார், மேலும் சீனாவில் மக்கள் இலக்கிய விருது, தெற்கு ஊடக இலக்கிய விருது மற்றும் லூ சுன் இலக்கிய விருது போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

Courtesy : poetry international . org

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page