தற்கால உய்குர் கவிதைகள்!
தமிழில் : கௌதம சித்தார்த்தன்
Contemporary Uyghur poems!
Abide Abbas Nesrin, Mirshad Ghalip, Ghojimuhemmed Muhemmed, Abdukhebir Qadir Erkan, Seydulla Firdews.
English translation : Joshua L. Freeman
Tamil translation : Gouthama Siddarthan
Photo : Yu-Jing Huang
*******************
I LOVE YOU
Abide Abbas Nesrin
I swear by the calluses inside me
I swear by hopes with whitening lips
I swear by my soul that can’t emerge
I swear by sunrises without you
If you become a wall I will still know you
In the pocket of a bird I would still feel you
If you are reborn as a snake I will still love you
நான் உன்னை நேசிக்கிறேன்
– அபிதே அப்பாஸ் நெஸ்ரின்
எனக்குள் இருக்கும் தடித்த தோலின் மீது சத்தியம் செய்கிறேன்
ஈரமாக்கும் உதடுகளின் நம்பிக்கை மீது சத்தியம் செய்கிறேன்
வெளிவர முடியாத என் ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்
நீ இல்லாத சூரிய உதயங்களின் மீது சத்தியம் செய்கிறேன்
நீ ஒரு சுவராக மாறினால் நான் உன்னை இன்னும் அறிவேன்
என் பாக்கெட்டில் இருக்கும் பறவையாக உன்னை இன்னும் உணருவேன்
நீ பாம்பாக மறுபிறவி எடுத்தால் நான் இன்னும் உன்னை நேசிப்பேன்!
*******************
I DREAM MY FRIENDS’ FACES
Mirshad Ghalip
I see my friends in my dreams at night,
perhaps I just miss them, perhaps it’s a sign.
The windy city’s gusts cannot reach Korla,
the greetings I send remain unheard.
The past looks at me with a haughty laugh,
I don’t understand where the future has gone.
Each night I sink into my dreams
like a bike with a wobbly wheel sinks into mud.
A face wrinkled by the lines of laughter,
soccer games in the street without a ball,
a curly-haired guy grinning in the cold,
the fire station shouting merrily in our young ears—
our only meeting place is in my dreams.
And I curse the morning that pulls me from them.
என் நண்பர்களின் முகங்களைக் கனவு காண்கிறேன் நான்!
மிர்ஷாத் காலிப்
என் இரவின் கனவுகளில் நண்பர்களைக் காண்கிறேன்,
ஒருவேளை நான் அவர்களை இழக்கிறேன், ஒருவேளை அது ஒரு அறிகுறி.
காற்று நகரத்தின் வீச்சு கோர்லாவை அடைய முடியாது,
தொடர்ந்து நான் அனுப்பும் வாழ்த்துக்கள் கேட்கப்படாமல் உள்ளன.
என்னை பார்த்து பெருமிதத்துடன் சிரிக்கிறது, கடந்த காலம்
எதிர்காலம் எங்கு சென்றதென எனக்குப் புரியவில்லை.
தடுமாறும் சக்கரம் கொண்ட மோட்டார் வாகனம் சேற்றில் மூழ்குவது போல,
ஒவ்வொரு இரவிலும் என் கனவுகளில் மூழ்கி விடுகிறேன்.
நகைப்பின் அலைகளால் மடிக்கப்பட்ட ஒரு முகம்,
பந்து இல்லாமல் தெருவில் கால்பந்து விளையாட்டு,
குளிரில் வெடவெடக்கும் ஒரு சுருள்முடிப் பையன்,
தீயணைப்பு நிலையம் எங்கள் இளம் காதுகளில் ஆரவாரிக்க
நாங்கள் சந்தித்துக் கொள்ளும் அந்த இடம் கலைய
அவர்களிடமிருந்து என்னை இழுக்கும் காலைப் பொழுதை சபிக்கிறேன் நான்.
**********************
MY WINGS
Ghojimuhemmed Muhemmed
Crows’ wings come from black clouds
Swallows’ wings come from drizzling rain
Pigeons’ wings come from rushing wind
Sparrows’ wings come from emerald leaves
My wings come from nowhere
I’ve
never
had them
என் சிறகுகள்
கோஜிமுஹம்மது முஹம்மது
கரு மேகங்களிலிருந்து வருகின்றன காகங்களின் றெக்கைகள்
மழைத் தூறலிலிருந்து வருகின்றன தூக்கணாங்குருவியின் றெக்கைகள்
புறாக்களின் றெக்கைகள் கடுங்காற்றிலிருந்து கடுகுகின்றன
சிட்டுக் குருவிகளின் றெக்கைகள் மரகத இலைகளிலிருந்து மருள்கின்றன
எங்கிருந்து வந்தன என் றெக்கைகள்
நான் அவற்றை
ஒருபோதும் அறிந்ததில்லை.
***********************
SEEING
Abdukhebir Qadir Erkan
I look to the sky
and existence is stained with fire
I look to the land
and the four corners smell of water
The sky sighs heavily
The land aches to its core
I look hard at my Self
and see you in my eyes
பார்த்தல்
அப்துஹேபிர் காதிர் எர்கான்
நான் வானத்தைப் பார்க்கிறேன்
அதன் இருத்தல் நெருப்பால் கறைபட்டுள்ளது
நான் நிலத்தைப் பார்க்கிறேன்
நாலா பக்கங்களிலும் நீர் வாசனை
வானம் விடும் பெருமூச்சில்
நிலத்தின் மையத்தில் வலி எடுக்கிறது
நான் என் சுயத்தை நுட்பமாக அவதானிக்கும்போது
உன்னை என் கண்களில் காண்கிறேன்.
****************
RAIN
Seydulla Firdews
I saw you off to the sky
and handed you my gathered sorrows
I believe your body is soft as a cloud
I believe my sorrows weigh your body down
I believe they fall in streams
I am parched
and I held my body to the sky
மழை
– செய்யத்துல்லா ஃபிர்தௌஸ்
நான் உன்னை தொலை வானத்தில் கண்டேன்
சேகரித்த துயரங்களை உன்னிடம் கையளித்தேன்
உன் உடல் மேகத்தின் மென்மையில் இருக்குமென நம்புகிறேன்
என் துயரங்கள் உன் உடல் எடையைக் குறைக்குமென நம்புகிறேன்
அவை நீரோடைகளில் வீழுமென நம்புகிறேன்
நான் வெப்பத்தால் உலர்ந்து போன என் உடலை
வானத்தை நோக்கி உயர்த்துகிறேன்!
*********************