உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் – 2 நிகழ்வில் கலந்து கொண்டு இணையவழி கவிதை வாசிப்பு நிகழ்த்த அன்புடன் இசைவு தந்துள்ளார்,
நவீன கிரேக்க கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான வசிலிக்கி ராப்தி!
கவிதை வாசிப்பு முடிவில் வாசகர்களுடன் கலந்துரையாடல்.
இவர் சர்வதேச பலக்லைக்கழகங்கள் பலவற்றில் கௌரவப் பேராசிரியராக பணிபுரிந்தவர். ஹார்வர்டில், நவீன கிரேக்க மொழியியல் குறித்தும், கவிதைகள் குறித்தும் கற்பித்துவரும் பேராசிரியர்.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மாத்திரமல்லாது, தீவிர மொழியியல், கிரேக்க நாடகவியல் மற்றும் சமூகவியல் இலக்கிய ஆய்வாளர். குறிப்பாக லுடிக் கோட்பாடு மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் சார்ந்த செயல்பாட்டாளர்.
இவரது பல நூல்களில் ஒன்றான ‘சர்ரியலிச அரங்கில் லுடிக் தன்மையும் அதற்கு அப்பாலும்’ என்ற நூல், லுடிக் கோட்பாட்டை மிக விரிவான தளத்தில் முன்வைக்கிறது.
இங்கு சுருக்கமாக லுடிக் கோட்பாடு குறித்து
“வேடிக்கை” என்று பொருள்படும் லுடிக் என்ற வார்த்தையின் பல்வேறு பரிமாணங்களில் அந்த வார்த்தை ஒரு தீவிரமான தன்மையுடன் மாறும் தன்மை மாற்றத்தை முன்னிறுத்தும் இலக்கியக் கோட்பாடு.
இது 1940 ஆம் ஆண்டில் உளவியலாளர்களால் அனைத்து தீவிரத்தன்மையிலும் உருவாக்கப்பட்டது. லத்தீன் வார்த்தையான லுடஸ் என்பதிலிருந்து லுடிக் என்ற கருத்து தோற்றுவிக்கப்பட்டது இது சமூகவியல் மற்றும் கல்வியியல் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் வேடிக்கையின் தீவிரத்தை முன்வைக்கும் பண்பைக் குறிக்கிறது.
***
உன்னதம் மொழிபெயர்ப்பு உரையாடல்கள்-2
2023, ஏப்ரல் 15 சனிக்கிழமை முழுநாள் நிகழ்வு
காலை 10.00 to மாலை 6.00
இக்ஸா மையம் – கான்ஃபரன்ஸ் ஹால்,
எக்மோர், சென்னை.