உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு 2 நிகழ்விற்கான லோகோ இன்று இணைய வழி நிகழ்வாக வெளியிடப்பட்டது.
வெளியிட்டவர் : ஷ யான் ஹு.
சீன நாட்டைச் சேர்ந்த சர்வதேச எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
*****
Translation Talks 2
மொழிபெயர்ப்பு உரையாடல்கள்
மொழிபெயர்ப்பின் அடுத்த கட்டத்தை நோக்கி..
இணையத்தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக மொழிபெயர்ப்புக் கலை எதிர்கொள்ளும் சவால்கள்.
மொழிபெயர்ப்புப் பதிப்புரிமைகளின் சிக்கல்களும், அவைகளை எதிர் கொள்ளும் வழிகளும்
சர்வதேச மொழிகளில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு நகரும் தருணங்கள்.
மொழிபெயர்ப்புச் சந்தைகளில் குமியும் சர்வதேச ஜோடனைகளினூடே அற்புதமான மலரைத் தேடும் தீவிர வாசகனின் தேடுகை என்பது என்ன?
சர்வதேச இலக்கிய அரங்கில் தமிழ்மொழியின் இடம் என்ன?
இப்படியான மொழிபெயர்ப்பு சார்ந்த பலவேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் உரையாடல்களை உள்ளடக்கிய ஒரு அடையாளச் சின்னமாக இந்த லோகோவும் தலைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்பாளிகள், வாசகர்கள், இந்த பின்புலத்துடன் இந்தத் தலைப்பைக் கையாளவேண்டும் என்று இந்தச் சின்னத்தையும் தலைப்பையும் இங்கு முன்வைக்கிறது உன்னதம்.
******
மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுள்ள நண்பர்கள் இந்த லோகோவை தங்களது செல்பேசியின் முகப்புப்படமாக வைத்துக் கொள்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் முகப்புப்படமாக வைத்துக் கொள்ளலாம்.