உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் – 2 நிகழ்வில் கலந்து கொண்டு இணையவழி உரையாடலை நிகழ்த்த அன்புடன் இசைவு தந்துள்ளார்,
சீன மொழிஎழுத்தாளரான ஷ யான் ஹு!
தலைப்பு: சர்வதேச விஞ்ஞான புனைவு எழுத்துக்கள் ஒரு பார்வை.
உரையின் முடிவில் வாசகர்களுடன் கலந்துரையாடல்.
சர்வதேச விஞ்ஞானப் புனைவு தளத்தில் முதன்மையான இடம் பிடித்திருக்கும் சீன மொழியின் படைப்பாளியான இவர், உலகளவில் கவனம் பெற்றுவரும் தற்கால சீன விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர், சீனாவில் விஞ்ஞானப் புனைவு எழுத்துக்களுக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற சீன நெபுலா விருதை, 2016 ஆம் வருடத்தில் வென்றவர். ஜார்ஜ் ஆர் ஆர் மார்ட்டின், ஜெஃப் வாண்டர்மீர் போன்ற சர்வதேச எழுத்தாளர்களின் பல ஆங்கில விஞ்ஞானப் புனைவு நாவல்களை சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார்,
கௌதம சித்தார்த்தன் எழுதிய விஞ்ஞானப் புனைவு கட்டுரை நூலை சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***
உன்னதம் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் – 2
2023, ஏப்ரல் 15 சனிக்கிழமை முழுநாள் நிகழ்வு
காலை 10.00 to மாலை 6.00
இக்ஸா மையம் – கான்ஃபரன்ஸ் ஹால், எக்மோர், சென்னை.