• Thu. Sep 21st, 2023

டி ஹேஷ் – வளர்ச்சிநிதி தாருங்கள்!

ByGouthama Siddarthan

Mar 8, 2023

டி ஹேஷ் ஆதரியுங்கள்! டி ஹேஷ் பயன்படுத்துங்கள்!

 

 

டி ஹேஷை ஥ உங்கள் கையில் ஒப்படைத்திருக்கிறேன். ஒரு தாய்மையின் ஆதுரத்துடன் அதை வளர்த்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

 

இது சம்பந்தமாக, உங்களது ஆலோசனைகள், கருத்துக்கள், செயல்பாடுகள்.. எல்லாமே மிக முக்கியமானவை. அவைகளை creator@dhash.tech என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இதன் செயல்பாட்டுப் போக்குகள், தரவிறக்கம் செய்வதில் உள்ள சிரமங்கள், கணினியில் நிறுவப்படும்போது ஏற்படும் சிரமங்கள், எல்லா சாதக பாதக அம்சங்களையும் கணக்கில் கொண்டு, அடுத்த பதிப்பில் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவரும்.

 

டி ஹேஷின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள் தளத்தில் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.

 

நண்பர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், இணையதள தொழில்நுட்ப வல்லுநர்கள்,  இணைய தள நிறுவனர்கள், வலைப்பதிவர்கள், இணையதள எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பதிவர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், போராளிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சூழலியலாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், யூ டியூப் நிகழ்ச்சி உருவாக்குனர் – தொகுப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், விளம்பர இயக்குனர்கள்.. மற்றும் வணிகம் சார்ந்த புதுமையான ஆடை, உணவு, வாழ்வியல் சார்ந்த அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பவர்கள்… என அனைவரும் இந்த உலகளாவிய டி ஹேஷ் ஥ முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும்.

 

சர்வதேச அரங்கில் ஒரு தமிழன் உருவாக்கிய  தமிழ்க் கொடி பட்டொளி வீசிப் பறப்பதற்கு 2000 ஆண்டு மரபு கொண்ட தமிழ்ச் சமூகத்தின் மேலான ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.

 

டி ஹேஷ் ஥ முயற்சியை சர்வதேசமெங்கும் கொண்டு போக உங்களது இதயபூர்வமான நிதி உதவி தந்து  ஆதரிக்க வேண்டுகிறேன்.

 

பணம் அனுப்பிய விபரம் குறித்து மறவாமல் மின்னஞ்சலில் தெரிவியுங்கள்.

 

வங்கி விபரம்.

 

P.Krishnasamy
STATE BANK OF INDIA
A/c No. 40697314867
IFSC Code  SBIN0021741
Branch Name and Code PERUNDURAI – 21741

 

Google Pay 9940786278

 

நான் இதுவரை உன்னதம் சிறுபத்திரிக்கையை 44 இதழ்கள் கொண்டு வந்துள்ளேன். “தமிழி’ என்கிற பெயரில் நாளிதழ் வடிவத்தில் ஒரு இதழ், Alephi என்கிற ஆங்கில மொழியில் ஒரு இதழ் கொண்டு வந்திருக்கிறேன். இணைய இதழ்களாவும் நடத்திக் கொண்டிருக்கிறேன். மற்றும், உன்னதம் பதிப்பகத்தின் வாயிலாக, சர்வதேச இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 15 மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த செயல்பாடுகளுக்காக  இதுவரை நான் எவரிடமும் பொருளாதார உதவி கேட்டதில்லை. இப்பொழுது கேட்கிறேன்!

 

தமிழ் மொழியின் அடையாளமாக உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் விளங்குவதை நாம் அறிவோம். செம்மொழி மரபின் பாரம்பரியமும், தமிழனின் அடையாளமும் இணைந்த கட்டிடக்கலையாகத் திகழ்கிற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், இந்தக் கட்டிடக்கலையின் நினைவாகவே, வரலாற்றில் போற்றப்படுகிறான். இந்தக் கோயிலை அவன் கட்டுவதற்காக, மக்களிடம் நிதி வேண்டினான். சோழனிடம் இல்லாத பொற்களஞ்சியமா? ஆனாலும், மக்களிடம் நிதி பெற்று இந்தக் கோயிலை ஸ்தாபித்தான். காரணம், இந்த மகத்தான கட்டிடக்கலை உலக வரலாற்றில் போற்றப்படும்போது, இது, தான் கட்டியதாக தனது சொத்தாக மட்டுமே நிலை பெறாமல், மக்களின் ரத்தத்தாலும் வேர்வையாலும் உருப்பெற்ற, மக்களின் நிதி ஆதாரத்தால் கட்டப்பட்ட மகத்தான ஆலயமாகப் பேசப்பட வேண்டும் என்று விரும்பினான்.

 

டி ஹேஷ் ஥ உங்களால் கட்டமைக்கப்பட வேண்டும்!

 

2000 ஆண்டு தமிழ் மொழியின் சமூக மரபை ஆவணவியலாகத் தொகுத்து வைத்திருக்கும் அரிதிற்கரிய செல்வமான சங்க இலக்கியத்தின் பக்கங்களிலிருந்து, என் முப்பாட்டனான, “பாண்டியன் பன்னாடு தந்தான்’ என்னும் சங்ககாலப் பாணனின் ஒரு பாடலை இங்கு வைத்து நிறைவு செய்கிறேன்.

 

தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான்  (குறுந்தொகை: 270) 

 

வெற்றியின் முகம் எனக்குக் கிடைத்ததால் அளவிடற்கரிய  பெருமகிழ்ச்சியோடிருக்கிறேன். வானமே மின்னலை வீசு, பறையின் துடியுடன் பெரு இடியாய் முழங்கு, பெரு மழையாய்ப் பொழி!

 

“பெருவான் இருள் துமிய மின்னிப் பொழிக! ஊழில் கடிப்பு இகுத்து முழங்கும் முரசு போல் இடி முழங்கிப் பொழிக!” என்று ஆசீர்வதிக்கும் தமிழுக்கு வணக்கம்.

 

உங்களில் ஒருவன்
஥கௌதம சித்தார்த்தன்

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page