டி ஹேஷ் உருவாக்குனர் கௌதம சித்தார்த்தனுடன் ஒரு நேர்காணல்
நேர்காணல் செய்தவர்: ஸ்ரீகாந்த் கந்தசாமி
ஸ்ரீகாந்த்: இந்த உங்கள் டி ஹேஷில் நுட்பமான பொருளடக்கம் சார்ந்த பார்வை உட்பொதிந்திருப்பதாகத் தெளிவு படுத்தினீர்கள். அந்தப் பார்வை புரட்சிகரமான செயல்பாடுகளை மேலும், புதிய பார்வையை – மாற்றுப் பார்வையை பயனர்களுக்கு ஏற்படுத்தும் என்று விளக்கமளித்தீர்கள். சாதாரணமான பதிவுகளைக் கூட இந்த டி ஹேஷை இணைப்பதன் மூலம், புதுமையான பார்வைகளைத் தரும் பதிவுகளாக அவை மாறுகின்ற நுட்பத்தை உதாரணங்கள் காட்டி புரிய வைத்தீர்கள். # ஹேஷ்டேக்குக்கும் டி ஹேஷுக்குமான வித்தியாசத்தை எடுத்துரைத்து, ஹேஷ்டேக்கின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் டி ஹேஷ் என்ற பார்வையை உணர்த்தினீர்கள். சரி. டி ஹேஷின் இன்விசிபிள் ஆன விஷயத்தை மட்டுமே பேசியிருக்கிறீர்கள். அதன் விசிபிள் பற்றிச் சொல்லுங்கள். ஹேஷ்டேக்கின் செ
கௌதம்: இதையும் நான் ஒரு சில கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.
முதன்மையாக 2 விஷயங்களை இங்கு சொல்லலாம்:
1. ஹேஷ்டாக் ட்ரெண்டிங் என்பது, ட்விட்டர் தளத்தில் முதன்மையான செயல்பாடு கொண்டது. ட்ரெண்டிங் எண்ணிக்கையை பயனாளர்களுக்குத் தெரியும் விதத்தில் தனியாக ஒரு பக்கத்தில் விபரமாகத் தெரிவிப்பது போல, மற்ற தளங்கள் தெரிவிப்பதில்லை. ஆனால், டி ஹேஷின் செயல்பாடு அப்படியல்லாமல், டி ஹேஷின் மீது கர்ஸரை வைத்தாலே, அது எத்தனை ஆயிரம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கைக் கணக்கைக் காட்டும். இந்த நடைமுறை எல்லா சமூக ஊடக தளங்களிலும் செயல்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறேன்.
2. டி ஹேஷ் உருவானதன் பின்னணியை ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதாவது, ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தின் ஃபாலோ – அப் போன்ற ஒரு மாற்றுப் பார்வை ஆக செயல்படுவது. இந்தப் பின்னணியில், இந்த டி ஹேஷை சிங்கிள் கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட டி ஹேஷ் குழுவின் பயனாளர் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
டபுள் கிளிக் செய்தால், இது சம்பந்தமான மூலக் கதையின் ஹேஷ்டேக் # பக்கத்திற்குக் கொண்டு போகும்.
அதுமட்டுமல்லாது, எல்லா சமூக ஊடகங்களும் ஏற்றுக் கொண்டு, பயனாளர்கள் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தப் பயன்படுத்த இன்னும் புதிய புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகளும் ஏறலாம்.
ஸ்ரீகாந்த்: இந்த டி ஹேஷ் உருவாக்கத்திற்கு, பிற நண்பர்கள் யாரேனும் பங்களித்துள்ளனரா?
கௌதம்: இந்த டி ஹேஷின் உருவாக்கம் குறித்து முதலும் முடிவுமாக உங்களிடம் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். மற்றபடி, இப்படியான ஒரு ஐடியா என் சிந்தையில் பளிச்சிட்டது, 2021 டிசம்பர் 20, அதிகாலை 12. 12க்கு. உடனே, “யுரேகா” என்று கத்திக் கொண்டு வெளியில் ஓடவில்லையே தவிற, வீட்டை விட்டு வெளியே வந்து, எதிரில் இருந்த மரங்கள் அடர்ந்த நெடுஞ்சாலையில், கால் போன போக்கில் உலாத்தினேன், மூன்றாம் ஜாமத்தின் சில்வண்டுகள் ரீங்கரித்தபடி என் தலைமுழுவதும் கொந்தளிக்கும் எண்ணங்களுக்கு பின்னணி இசை கூட்டிக் கொண்டிருந்தன.
அதாவது, இந்த 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் வளர்ச்சியானது, தகவல் மற்றும் இணையத் தொழில் நுட்பத்தின் போக்கு, செயற்கை நுண்ணறிவு என்னும் இயந்திரத்திற்கும் மனிதனுக்குமான இணைவு, மெய்நிகர் தொழில் நுட்பத்தின் மெடா வளர்ச்சி, டிஜிட்டல் மயமாகிப் போன மனித வாழ்வியல்… இப்படிப் பல்வேறு போக்குகளினால் பெரும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், என் தாய்மொழி சார்ந்த தமிழ் மண்ணில் மாத்திரம், அது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறையின்றி, சாதியவாதமும், மதவாதமும், இனவாதமும் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கும் போக்கே முதன்மை பெற்று வருகிறது.
முற்போக்காளர்கள், சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், பேஸ்புக் பதிவர்கள்.. என பெரும்பான்மையோர் இதுபோன்ற சிந்தையிலேயே சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருகின்ற போக்கை கண்டு, மனம் வெதும்பியிருக்கிறேன். இந்த 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் வளர்ச்சியைப் பற்றி கொஞ்சமேனும் சமூகப் பிரக்ஞையை, தமிழ்ச் சமூக ஊடக வெளியில் ஏற்படுத்த வேண்டும் – ஒரு சிறு மாற்றத்தின் அசைவையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், “மெடாபுக்’ என்கிற தலைப்பில் எதிர்கால இணையத்தின் டிஜிட்டல் வளர்ச்சி மூன்றாம் உலக நாடுகளை எப்படியெல்லாம் பாதிக்கப்போகிறது, கட்டுப்படுத்தப் போகிறது, அந்த வளர்ச்சி என்கிற பெயரில் மறைந்திருக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ வாதம் – Digital colonialism – Internet colonialism – பற்றியெல்லாம் விரிவான பார்வையை சாதிச் சண்டைகளில் மாட்டிக் கொண்ட தமிழ்கூறு நல்லுலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற அவாவில் இதழ் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது உருவானதுதான் டி ஹேஷ் !
நான் எப்போதுமே, ஒரு பத்திரிக்கையை ஆரம்பிக்கும் போது, புத்தம் புதிய ஒரு அம்சத்தை உருவாக்குவேன். அது குறித்த விரிவான பார்வைகளை முன்வைத்து அந்த அம்சத்தை பல்வேறு விளக்கங்களுடன் வாசகர்களின் வாசிப்புப் பார்வைக்கு கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்பது கடந்த கால வரலாறு.
1985களில் உன்னதம் பத்திரிகையை ஆரம்பித்தபோது, “புதுவகை எழுத்து’ என்கிற ஒரு எழுத்து பாணியை உருவாக்கி அதை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படு
இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்: நான் அடிப்படையில், சிறு கதைகள் சார்ந்த நவீன இலக்கிய எழுத்தாளன். தமிழ் இலக்கிய உலகம், ஒவ்வொரு காலகட்டத்திலும், தன் பழைய போக்குகளிலிருந்து வளர்ச்சி பெற்று, ஒரு புதிய பாணியை உருவாக்கி அதில் செயல் பட்டுக் கொண்டிருக்கும். சுதந்திரத்திற்கு முன்பான மணிப்பிரவாளப் போக்கை உடைத்தெறிந்து, ஒரு புதிய உரைநடைப் போக்கை புதுமைப்பித்தன் உருவாக்கினார். இதன் உச்ச பட்ச எழுத்தாளராக மௌனி உருவானார். சங்ககால மரபு சார்ந்த மரபுக் கவிதைகளின் போக்கை உடைத்து, ந.பிச்சமூர்த்தியும், சுப்ரமணிய பாரதியாரும் “புதுக்கவிதை’ என்ற பாணியை உருவாக்கினார்கள். இதன் நீட்சியாக, மனித வாழ்வின் யதார்த்தமான கூறுகளை முன்வைத்து, “கரிசல் எழுத்துக்கள்’ என்ற பாணி உருவானது.
அதன்பிறகு, சி.சு. செல்லப்பா நடத்திய “எழுத்து’ பத்திரிகை மேலைநாட்டு இலக்கியப் போக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்தது, அந்தப் பார்வையில், தமிழின் செழுமையான மரபுடன், மேலைநாட்டு இலக்கியப் போக்குகளை அடியொற்றி எழுதும் பாணி தமிழில் தோன்ற ஆரம்பித்தது. இது ஒரு புதிய கலை சார்ந்த பார்வையை தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தி, புதிய நவீன படைப்புகளுக்கு வழிகோலியது. ஆனால், இதன் அடுத்தடுத்த கட்ட நீட்சி என்பது, அதாவது அடுத்து வந்த 1980 கள் காலகட்டம் என்பது, மேலை நாட்டின் ரியலிசம், சோஷியல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற போக்குகளை, புதிய பாணி என்ற பெயரில், தமிழில் நகலெடுக்க ஆரம்பித்ததுதான், அதன் மோசமான துயரகரமான வரலாறு.
ஆனாலும் அந்த 1980 கள் காலகட்டங்கள் ஒருவிதத்தில் மிக முக்கியமானவை. அந்தக் காலகட்டத்தில்தான், பின்நவீனத்துவம் (Post-modernism) என்னும் இலக்கியப் பார்வை பெரும் வெடிப்பாக உலகம் முழுவதும் வெடித்தது. இதை அப்படியே பின்பற்றி, தமிழில் பின்நவீனத்துவ எழுத்து என்ற பாணியை உருவாக்கினார்கள்.
நான் ஒரு நவீன இலக்கியம் சார்ந்த எழுத்தாளன் என்ற முறையில் இதிலிருந்து முற்றிலும் முரண்பட்டேன். மேலைநாட்டுக் கூறுகளில் இருந்து உருவான இந்த இலக்கியப் பார்வை, தமிழின் நவீன இலக்கியத்திற்கு சற்றும் ஒவ்வாதது. எம் தமிழ் மண்ணின் வேர்களிலிருந்து உருவாகும் இலக்கியப் பார்வையே, தமிழ் வாழ்வின் அசலான முகத்தை முன்வைக்கும் என்ற பிரகடனத்துடன் “புதுவகை எழுத்து’ என்கிற ஒரு புதிய இலக்கியப் பார்வையை தமிழ் இலக்கியத்தில் உருவாக்கினேன்.
உலகளவில் கூட அங்கீகாரம் பெற்றுவிடலாம் ஆனால், குறுங்குழுவாதமும் சாதியவாதமும் மட்டுமே கொண்ட தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகாரம் பெறுவதென்பது இயலாத காரியம் என்பதற்கு, என் எழுத்துக்கள் உலகளவில் 23 மொழிகளில் வெளிவந்ததும், தமிழில் கள்ள மௌனம் காப்பதுமே சாட்சியம்!
அதன்பிறகு, சமீபத்தில் ஆரம்பித்த “தமிழி’ இதழில், கேலியும், கிண்டலும், வசைச் சொல்லாகவும், சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் “நரிக்குறவர்’ என்னும் தமிழ் இனக்குழு சார்ந்த சமூகத்தின் பெயரை “பாசிமணியர்’ என்று ஆதாரப்பூர்வமாக முன்வைத்து புதிய பெயரை உருவாக்கினேன். இந்தப் பெயர் உருவாக்கத்தை எதிர்த்து, பழைய பெயரே நன்றாக இருக்கிறது என்று கேலி பேசியவர்களில், பலர், முற்போக்கான பார்வை கொண்டவர்கள்.
நிற்க. டிஜிட்டல் நூற்றாண்டின் அடுத்த கட்ட இணைய வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு முகமாக, தற்பொழுது, துவங்கியிருக்கும “மெடாபுக்’ இதழ் தயாரிப்பின்போது உருவானதுதான் டி ஹேஷ் !
இந்த டி ஹேஷ் சிந்தனை எனக்குள் உருவான உடனே, 2 மாத காலம் இது குறித்த தொழில்நுட்பத் தேடலிலேயே வீணாகக் கழிந்தன காலங்கள். ஆம், இந்த குறியீட்டுச் சொல்லை கணினியில் எழுதுவதற்கான, ஒரு எழுத்து வடிவமாக ஜெனரேட் செய்வதற்கான தொழில் நுட்ப வல்லுநர்களைத் தேடி அலைந்தேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த குறியீட்டுச் சொல்லை இணையத்தில் ஜெனரேட் செய்ய முடியாது. ஆகவே முதலில் கணினியில் (Word, PageMaker, InDesign, NotePad, Photoshop, CorelDraw போன்ற Writing சார்ந்த மென்பொருள்களில்) டைப் செய்வதற்கு உகந்த விதத்தில் ஒரு எழுத்துருவாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். இது சம்பந்தமாக, இணையத் தொழில்நுட்பம் சார்ந்த நண்பர்களிடம் விரிவாக விளக்கினால், வீண் குழப்பங்களும் நேர விரயமும்தான் ஆகும் என்பதால், சுருக்கமாகச் சொன்னேன்: “இது ஒரு லோகோ, இந்த லோகாவை கணினியில் டைப் செய்யும் விதத்தில் எழுத்துருவாக மாற்றிக் கொடுங்கள்..’ ஆனால், பெரும் ஏமாற்றத்தையே சந்தித்தேன்!
இறுதியாக, கணினியில் டைப் செய்வதற்காக தமிழ் எழுத்துருவை ஆரம்ப காலங்களில் உருவாக்கியவரும், நவீன எழுத்தாளருமான ஜி முருகன், Ttf (TrueType Font) என்னும் எழுத்துருவாக மாற்றித் தந்தார். இந்த எழுத்துரு, நம் கணினியில் நிறுவியிருக்கும் Writing சார்ந்த மென்பொருள்களில் டைப் செய்வதற்கானது. அதற்கடுத்த நீண்ட தேடலில், தமிழ் இணையம் சார்ந்த எழுத்துரு சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப எழுத்தாளர், நீச்சல்காரன் ராஜா, இந்தக் குறியீட்டு லோகோவை, இணையதளத்தில் (Website, Blog..) செயல் படுத்துவதற்கான விதத்தில் ஒரு எழுத்துருவாக மாற்றித் தந்தார்.
முதன் முதலாக நான் உருவாக்கிய டி ஹேஷை இணைய தளத்தில் ஒரு எழுத்துருவாகப் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு, எத்தனை மில்லியன், பில்லியன் பணம் கொடுத்தாலும் ஈடாகாது!
ஸ்ரீகாந்த்: டிஜிட்டல் காலனியவாதம் குறித்தெல்லாம் பேசுகிறீர்கள். ஏன் சில நாடுகளின் தரவை, பிக் டெக் எனப்படும் நிறுவனங்கள் கட்டுப்படுத்த விரும்புகின்றன? பிக் டெக் என்றால் என்ன? இது குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.
கௌதம்: டிஜிட்டல் காலனித்துவமானது, காலனித்துவத்தின் அடிமையாக்கும் தன்மையை வேறு விதமான அர்த்தத்தில் டிஜிட்டல் யுகத்தில் தீர்மானிக்கப்படுவதாக சமூக விமர்சகர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அபிப்ராயம் தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, நான் ஏற்கனவே சொன்னது போல, வல்லரசு நாடுகள், தங்களது ஏகாதிபத்திய சிந்தனைகளை, வணிகங்களை, கலாச்சாரங்களை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளின் மீது திணிக்கும் போக்கின் தொழில் நுட்பச் செயல்பாடுகள் என்று சொல்லலாம். கடந்த 2019 ஜூன் மாதம் ஜப்பான் ஒசாகாவில் நடந்த G20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் பலவும், பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
WTO (World Trade Organization) என்னும் உலக வர்த்தக அமைப்பு உலகளாவிய வர்த்தக விதிகளைக் கையாள்கிறது.
இந்த அமைப்பு, அதன் நோக்கத்தின் கீழ் பல்வேறு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களை வழங்கும் முக்கிய தரவுத்தளங்களின் தேர்வுகளைத் தீர்மானிக்கிறது. இந்தப் பின்னணியில், G20 உச்சி மாநாட்டில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட சிலநாடுகள், இந்த ஒசாகா டிராக் குறித்த பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று முடிவு செய்தன, ஏனெனில், ஆவணத்தில் தரவு பற்றிய தங்கள் சொந்த நலன்களை வைக்க அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பெரும்பான்மையான வளரும் நாடுகளும் டிஜிட்டல் வர்த்தகத்தில் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் டிஜிட்டல் தொழில் மயமாக்கலுக்கான “கொள்கை இடம்’ மறுக்கப்படும் என்ற அச்சத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தின. உங்கள் தரவை யார் சேமித்து வைப்பது என்பதில் உலகளாவிய நிலைப்பாடு உள்ளது.
உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் அதிக தரவு மையங்களை வழங்குவதற்கான பொருளாதார வாதம் என்னவென்றால், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான “கிளவுட் யுத்தங்கள்’ (cloud wars) பல ஆண்டுகளாக ஒரு முக்கிய காரணியாகக் காணப்படுகின்றன, ஏனெனில் நிறுவனங்கள் மிகவும் திறமையான கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை மேம்படுத்துவதில் போட்டியிடுகின்றன. இந்த உள்ளூர் கிளவுட் நிறுவனங்களுக்கான உலகளாவிய போட்டியில், பெரும் சந்தையை உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் தொழில் மயமாக்கலை அதிகரிக்கும், மேலும் உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் துறையின் பிற பகுதிகளுடன் இணைப்புகளை உருவாக்கவும் வழிகோலுகிறது. உதாரணமாக, பேஸ்புக் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக எண்ணிக்கையிலான பேஸ்புக் பயனாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், பேஸ்புக்கின் 15 டேட்டா சென்டர்களின் இருப்பிடத்தைப் பார்க்கும்போது, பத்து வட அமெரிக்காவிலும், நான்கு ஐரோப்பாவிலும், ஆசியாவுக்காக சிங்கப்பூரில் ஒன்றுமாக உள்ளன.
இது போன்ற தரவு மையங்களின் தொலை இருப்பிடம் மற்றும், இடைவெளி, இந்தியா போன்ற நாடுகளின் தரவுகளை, காலனித்துவ மயமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற மூன்றாம் உலக நாடுகளின் தரவுகளை கட்டுப்படுத்தும் அல்லது தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மூலவர்களாக Big Tech இருக்கிறது என்பது சமூக அரசியல் விமர்சகர்களின் வாதம்.
பிக் டெக் அல்லது பிக் ஃபோர் என்று சொல்லப்படும் பதம், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போதுள்ள நான்கு பெரிய, உலகளவில் பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் நிறு வனங்களுக்கு வழங்கப்படும் பெயர். கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகிய 4 நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட் ஐயும் இணைத்து பிக் ஃபைவ் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்த பிக் டெக்தான் உலகத்தையே தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது என்று விமர்சனம் செய்யப்படுகிறது. இவைகளை முன்வைத்து, ஒரு நவீன காலனிய வாதமாக, டிஜிட்டல் காலனியவாதமாக உருப்பெற்று வரும் சூழல்களாக சமூக ஊடக விமர்சகர்கள் விமர்சனங்களை கணிக்கிறார்கள். இன்னும் இது குறித்து நிறைய்ய்ய்யச் சொல்லலாம்.
ஸ்ரீகாந்த்: இதன் தொடர்ச்சியாக, தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ரஷ்ய – உக்ரைன் போரில் சமூக ஊடகங்களின் தரவுக் கட்டுப்பாடுகள் எந்த ரீதியில் செயல்படும் என்று கருதுகிறீர்கள்?
கௌதம்: நம் கண் முன்னால், ரத்தமும் சதையுமாக போரின் கொடூர நிகழ்வுகள் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் மட்டுமே, தங்களது அறம் சார்ந்த மதிப்பீடுகளை முன்வைத்து வரலாற்றுச் சாட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்தருணத்தில், மகாபாரதம் என்னும் நம் பாரத இதிகாசத்தில் நடந்த குருச்சேத்திரம் என் கண்களில் ஊழியாடுகிறது. கண்களை இழந்த கையறு நிலையில் இருந்த அஸ்தினாபுரத்தின் மன்னன் திருதராஷ்டிரனுக்கு, குருச்சேத்திர யுத்த நிகழ்வுகளை எடுத்துச் சொன்ன சஞ்சயன் என்னும் பாத்திரம் மிக முக்கியமானது. அதன் செய்திகளைத் தொகுத்துச் சொல்லும் தார்மிகப் பார்வையும், அறம் சார்ந்த சிந்தனையும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட ஊடக தளங்களில் மிக மிக அற்புதமாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கின்றன. சர்வதேச ஏகாதிபத்திய அரசியல்களில் காய்கள் நகர்த்தும் பகடை ஆட்டத்தை, அதன் நுண்ணரசியலை, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கின்றன சமூக ஊடகங்கள்!
ஒரு கையறு நிலையில் குரலற்றவர்களாக இருக்கும் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்கின்றன. எந்தவிதமான அதிகார வல்லமையும், பலம் மிக்க செல்வாக்கும் அற்ற ஒரு எளிய மனிதன், சர்வ வல்லமையும், சுட்டுவிரல் அசைவில் உலகத்தையே சுருட்டும் அதிகார ஆதிக்கமும் பொருந்திய நாடுகளின் பிரதமர்களோடு, ஜனாதிபதிகளோடு இணையாக அமர்ந்து கருத்துக்களை பேசுவதற்கு, அவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு, திட்டுவதற்கு, கலாய்ப்பதற்கு, கற்பனையே செய்ய முடியாத வண்ணம் தளம் ஏற்படுத்திக் கொடுத்த சமூக ஊடகங்களின் செயல்பாடு என்பது அளவிட முடியாத கடவுள் சக்திக்கு நிகரானது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போர் சம்பந்தமாக ஒரு ட்வீட் போடுகிறார். உடனே, பெயரறியாத மிக மிகச் சாதாரண ஜனங்கள் பாய்ந்து வந்து அவரைக் கடித்துக் குதறுகிறார்கள். கலாய்த்துத் தள்ளுகிறார்கள். தேவதைக்கதைகளி
மகாபாரதத்தில் நாட்டுப்புறக் கதையாக வழங்கப்படும் “பேசும் தலை’ என்னும் பர்பரீக் கதை ஞாபகம் வருகிறது. பழங்குடி நாகர் வம்ச இளைஞனும், பாண்டவர் வனவாசத்தின் போது, பீமனுக்கு மகனானவனுமான மாபெரும் பலசாலி பர்பரீக் என்பவன், குருஷேத்திரப் போரில் கலந்து கொள்ள முன்வருகிறான். ஆனால், அவன் ஒரு வினோதமான நிபந்தனையை முன்வைக்கிறான். போரில் யார் மிகவும் பலவீனமாக தோற்றுப் போய்விடும் நிலையில் உள்ளனரோ அவர்கள் பக்கம்தான் நான் நிற்பேன் என்கிறான். அவனது இந்த நிலை, பெரிய பிரச்சினை ஆகி விடும் என்பதை உணர்ந்த கிருஷ்ணன், அவனைத் தந்திரத்தால் தலையை வெட்டிக் கொன்று விடுகிறான்.
ஆனால், பர்பரீக்கின் இறுதி ஆசை போரைப் பார்க்க வேண்டும் என்பது. அவனது இறுதி ஆசையை நிறைவேற்ற அவனது தலைக்கு மட்டும் உயிர் கொடுத்து, ஒரு பெரும் குன்றின் மீது வைக்கப்படுகிறது. அந்தத் தலை, போரை முழுமையாகப் பார்க்கிறது. போர்க்களத்தில் ஏதாவது ஒரு அணி தோற்கும்போது, பர்பரீக்கை நினைத்துக் கொண்டால் போதும், உடனே தலை பெருங்குரலெடுத்துச் சிரிக்கும். அந்த நகைப்பு, ஜெயித்துக் கொண்டிருக்கும் அணியின் படைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விடும். தோல்வியாளர்கள் பழைய பலத்துடன் மீண்டெழுவார்கள்.
ஒருவழியாய் போர் முடிந்த பிறகு, “யார் சிறந்த போர் வீரன்?’ ‘எத்தரப்பு அறம் சார்ந்த போர் தர்மங்களுடன் யுத்தம் செய்தது?’ என்ற வாதப்பிரதிவாதங்கள் நாடெங்கும் நடக்கின்றன. பாண்டவர்களுக்கும் இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள ஆசை.
“சரியான பதில் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் போய் பேசும் தலையிடம் கேளுங்கள்
பாண்டவர்கள், அந்தத் தலையிடம் சென்று, இந்தக் கேள்விகளைமுன்வைத்து, “போரை முழுமையாகப் பார்த்தது நீதான்; நியாயமாய் யுத்தத்தை நடத்தியது யார்?” என்று கேட்கிறார்கள்.
அப்பொழுது அந்தத் தலை பெரும் குரலெடுத்து, அந்த மன்னர்களைப் பார்த்து கேலியாக நகைக்க ஆரம்பிக்கிறது.
இந்த நகைப்பும் நையாண்டியும்தான் போரியலில் மறைந்திருக்கும் குரூரமான அபத்தத்தை உணர்த்தும் மிகப்பெரும் பதில்! தீர்க்கதரிசனம்!!
போருக்கு எதிராக குவெர்னிக்காவின் வெறிகொண்ட சிரிப்பை வரைந்தான் பிக்காஸோ, அதன் உன்மத்தத்தை 9 வது சிம்பொனியாக இசைத்தான் பீத்தோவன். தற்காலத்தில், போரின் அபத்தங்களை, தனது பலகோடிக் கரங்களால் சுட்டிக் காட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றன சமூக ஊடகங்கள்!
போரின் அவலங்களை கொடூரங்களை வேறெந்த மொழிப் படைப்புகளிலும் இல்லாத தனிச் சிறப்பு வாய்ந்த போர் இலக்கியங்களாக உருவாக்கியது ரஷ்
போர் என்பது அழிவே இல்லாத அசுரனைப் போன்றது. நாட்டுப்புறக் கதைகளில் சொல்வதுபோல, அசுரனை நாம் கொல்ல முயற்சிக்கும் போது, அவன் சிந்தும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் ஒரு அசுரன் தோன்றிக் கொண்டே இருப்பான்.. அவனை அழிக்க நினைத்தால், பல்வகையான வடிவங்களில் உருமாற்றம் அடைந்து முன்னைவிடவும் அதி வேகத்துடன் செயல்படுவான்.
மன்னியுங்கள்: மீண்டும் ஒருமுறை மகாபாரதத்திலிருந்து ஒரு உவமையை எடுத்தாள வேண்டியிருக்கிறது.
வானில் ரெக்கைகளை விரித்து வட்டமிடுகிறது ஒரு பறவை. குரு துரோணாச்சாரியார் தனது சீடர்களை நோக்குகிறார். அர்ச்சுனன் வில்லும், அஸ்வத்தாமா வில்லும் வானை நோக்கி உயருகின்றன. இறக்கைகள் துள்ளித் துவள சுழன்றபடி பறவை வீழ்கிறது. அருகில் சென்று பார்த்தால், அர்ச்சுனனின் அம்பு மட்டும் பறவை மீது தைத்து நிற்கிறது. அப்படியானால், அஸ்வத்தாமாவின் அம்பு எங்கே?
அது, முடிவற்ற கால வெளியில் சாகாவரம் பெற்ற ஒரு போராயுதமாக மாறிப் போய்க்கொண்டேயிருக்கிறது… பற் பல யுகங்கள் கடந்த அந்த ஆயுதம், ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலவெளியின் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும். இப்பொழுது அதுபோன்ற ஒரு உருமாற்ற நிகழ்வில், அணுஆயுதங்களாகவும், உயிர்க்கொல்லிக் கிருமிகளாகவும் ஏகாதிபத்திய அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான போராக நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தைவான் மற்றும் நியூசிலாந்து ஆகியவை ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை வெளியிட்டு வருகின்றன. ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுக்கும் போது, போருக்கு எதிரான நேச நாடுகள் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் போர் தொடுக்கும் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதென்பது கடந்த காலப் போர் வரலாறுகள் முழுக்க எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் விஷயம். இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்தப் போரை நுட்பமாகக் கவனியுங்கள்.
கூகுள் (ஆல்பாபெட்), ஆப்பிள், மெட்டா (பேஸ்புக்) மற்றும் பிற இணைய ஊடக நிறுவனங்கள் ரஷ்யாவின் மீது தங்களது போர் தார்மிகம் பொருந்திய “இணையத் தடையை’ விதித்துக் கொண்டிருக்கின்றன.
ஃபார்ச்சூன் இதழ் செய்தியின்படி, கூகுள், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரஷ்யாடுடே மற்றும் பிற சேனல்கள் தங்கள் இணையதளங்கள், பயன்பாடுகள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. ஐரோப்பா முழுவதும் கிரெம்ளின் சார்பு ரஷ்ய ஊடகங்களான RT மற்றும் Sputnik உடன் தொடர்புடைய யூ டியூப் சேனல்களைத் தடுப்பதாக Google Europe கூறுகிறது.
Apple Pay மற்றும் பிற சேவைகள் வரையறுக்கப் பட்டுள்ளதாகவும், ரஷ்யாவிற்கு வெளியே உள்ள ஆப் ஸ்டோரில் இருந்து ஆர்டி செய்திகள் மற்றும் ஸ்புட்னிக் செய்திகள் இனி பதிவிறக்கம் செய்ய முடியாது. உக்ரேனிய குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ரைனில் உள்ள Apple Maps இல் போக்குவரத்து மற்றும் நேரலை சம்பவங்கள் இரண்டையும் நாங்கள் முடக்கியுள்ளோம்.. என்கிறது ஆப்பிள்.
இவ்வாறாக, பேஸ்புக் உள்ளிட்ட இணையதள சமூக ஊடகங்கள் போருக்கு எதிராக தங்களது எதிர்ப்புணர்வைக் காட்டிக் கொண்டிருக்கிறன.
கூடவே, போனஸாக இன்னொரு ராய்ட்டர்ஸ் இதழ் செய்தி: சர்வதேச தடைகளுக்கு இணங்க, மாஸ்டர்கார்டு மற்றும் விசா ஆகிய இரண்டும் (புகழ் பெற்ற அமெரிக்க நிதிப்பயன்பாட்டு நிறுவனங்கள்) தங்களது கட்டண நெட்வொர்க்குகளில் இருந்து குறிப்பிட்ட சில ரஷ்ய செயல்பாடுகளைத் தடுத்துள்ளன.
கடந்த ஜூலை 2021 ல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்ட ரஷ்ய சட்டம், தினசரி 500,000 க்கும் மேற்பட்ட பயனாளர்களைக் கொண்ட வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்கள், உள்ளூர் அலுவலகங்களைத் திறக்க கடுமையான தடைகளை அமல்படுத்தியது. புதிய விதிகள் ரஷ்ய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான Roskomnadzor உடன் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பயனாளர் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லியது.
(Roskomnadzor என்பது தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெகுஜன ஊடகங்களின் சேவைகளுக்கான மேற்பார்வைக் கூட்டமைப்பு).
ரஷ்ய வெகுஜன அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், வெகுஜனத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட ஊடகங்களின் சேவை குறித்த கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், தணிக்கை பொறுப்பு மற்றும், செயலாக்கப்படும் தனிப்பட்ட தரவுகளின் ரகசியத்தன்மையைப் பாதுகாத்தல், ரேடியோ அதிர்வெண் சேவையின் பணிகளை ஒழுங்கமைத்தல், மேற்பார்வை செய்தல் ஆகியவை இதன் பொறுப்பில் அடங்கும்.)
இவ்வளவு கட்டுப்பாடுகளையும் ஏற்று, இயங்கிய சர்வ தேச சமூக ஊடகங்கள் இன்றைக்கு தங்களது போர் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றன.
இன்னும், விக்கிபீடியாவின் ரஷ்ய மொழித் தளத்தில் வெளிவந்திருக்கும் “உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு (2022)’ என்ற கட்டுரை குறித்து ரஷ்யா அதிருப்தியில் இருப்பதாகவும், ரஷ்ய விக்கிபீடியா தளத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச ஊடகச் செய்திகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில், ரஷ்ய மற்றும் உக்ரைன் இணையதளங்கள் பல்வேறு தடைகள், மற்றும் சைபர் தாக்குதல்களுக்கும் பலியாகி வருவதால், சில வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கான அணுகலை மாஸ்கோ கட்டுப்படுத்துவதால், இரு நாடுகளிலும் உள்ள இணையப் பயனாளர்கள் தடைகளைத் தவிர்க்க VPN (Virtual private network) என்னும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை நோக்கி நகர்கின்றனர். (VPN என்பது பயனாளர்கள் தங்கள் இணைய போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும், தங்களின் அடையாளங்களை இணையத்தில் தனிப்பட்டதாக வைத்திருப்பதற்கும் எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். VPNகள் சட்டபூர்வமானவை, மேலும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் ஆன்லைன் செயல்பாட்டைப் பாதுகாக்க, அதிக கட்டுப்பாடுகள் உள்ள அரசாங்கங்கள் உள்ள நாடுகளில் அவை தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. அட்லஸ் என்னும் VPN சேவை நிறுவனத்தின் தரவுப்படி, இந்தியாவில் 28 கோடி பேர் VPN பயன்படுத்துகிறார்கள்)
இந்த VPN தரவுகளை என்க்ரிப்ட் செய்யும் மற்றும் பயனாளர்களின் இருப்பிடம் பெருமளவில் உயர்ந்துள்ளது, VPN மதிப்பீட்டு நிறுவனமான Top 10 VPN இன் தரவுப்படி, ரஷ்யாவிலும், உக்ரைனிலும் பிப்ரவரி 15லிருந்து அதிகரிக்கத் தொடங்கி கற்பனை செய்யமுடியாத அளவில் உயர்ந்துள்ளதாக ராய்ச்சர்ஸ் தெரிவிக்கிறது.
இந்த ரீதியில், சமூக ஊடகங்களின் போர் மீதான விமர்சனப் பார்வை என்பது, எளிய மனிதனின் எல்லையற்ற சக்தியின் உருவகமாக, ஆதிக்க அதிகாரத்திற்கு எதிரான தார்மிகமான குரலாக ஒலிக்கிறது. நாடுகளின் எல்லைகளை வரையறுத்த ஏகாதிபத்தியங்களின் வேலியை, சிலிக்கான் வெளி, உடைத்து நொறுக்கும் சூழல் பற்றியும், அதை ஒரு குறியீடாகச் சுட்டிக் காட்டும் டி ஹேஷ் பற்றியும் பேசிக்கொண்டே போகலாம்.
ஸ்ரீகாந்த்: நீங்கள் உருவாக்கியிருக்கும் டி ஹேஷ் குறியீடு, ஹேஷ்டேக்கின் பயன்பாட்டுக்கு மாற்றானதா? எதிரானதா? இதன் வரவினால் ஹேஷ்டேக் # ஒழிந்து போய்விடுமா? நாடகத்தின் வருகையால் தெருக்கூத்துக் கலை அழிந்தது போல, திரைப்படத்தின் வருகையால் நாடகக்கலை அருகியது போல..
கௌதம்: இதை அப்படி ஃபிளாட் ஆக யோசிக்க வேண்டியதில்லை. சிலிக்கான் வெளியில், ஒரு கண்டுபிடிப்பின் வருகை என்பது, பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும் விஷயம். பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் திருவிழா! இணையம் சார்ந்த ஒவ்வொரு செயலியும், நிரலியும், மென்பொருளும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததிலிருந்து வளர்ச்சி / மாற்றம் பெற்று அடுத்தடுத்த பதிப்புகளாக தோன்றிக் கொண்டே இருப்பது இயற்கை. மாற்றம் என்பது முடிவிலி.
பயனாளர்களின் பயன்பாட்டில், ஹேஷ்டேக்குக்கான இடம் என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். அதன் நீட்சியாக, அடுத்த கட்ட வளர்ச்சியாக டி ஹேஷுக்கான இடம் பயனாளர்களிடையே உருவாகிக்கொண்டே இருக்கும்.
கலை இலக்கியச் செயல்பாடுகளிலும், தகவல் தொழில் நுட்பங்களிலும் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது தோன்றிக்கொண்டேதான் – மாறிக்கொண்டேதான் – இருக்கும்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரெஞ்சு மொழியில் தோன்றிய Avant-garde என்னும் கலை இலக்கிய இயக்கம் முக்கியமானது. இது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த கலைச் செயல்பாடுகளில் அழகியலுக்கு முக்கியத்துவம் தரக் கோரும் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொள்கைகளை முன்வைத்து இயங்கியது. இதன் அடுத்த கட்டமாக, இதனை வழியொட்டி ஐரோப்பாவில் தோன்றிய உலகப்புகழ் பெற்ற கலை இயக்கம், டாடா (DADA)!
கலைஞர்களுக்கே உரித்தான போர் எதிர்ப்பை முன் வைத்து, முதலாம் உலகப் போருக்கு எதிர்வினையாக உருவாக்கப்பட்டது டாடா. டாடா என்பது, பிரெஞ்சு மொழியில் குழந்தைகள் விளையாடும் பொம்மைக் குதிரைக்கான பேச்சு வழக்குச் சொல். இது குழந்தைமைக்கு எதிரான வாழ்வின் அபத்தத்தை முன்வைக்கும் விதமாக, இந்த படிமத்தை உருவகப்படுத்தும் விதமாக டாடா அமைப்பாளர்களில் ஒருவரான டிரிஸ்டன் ஸாரா உருவாக்கினார். டாடா இயக்கத்தினர் நவீன முதலாளித்துவ சமூகத்தின் அழகியலை நிராகரித்து, வன்முறை, போர் எதிர்ப்பு,மற்றும் தேசியவாத எதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு ஆகியவற்றில் தங்கள் கலைகளை வெளிப்படுத்தினர். லூயிஸ் ஆரகோன், பால் எலுவார்ட், ஆந்த்ரே பிரெட்டன், டிரிஸ்டன் ஸாரா, மாக்ஸ் எர்னஸ்ட்… உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.
1900 களில் பெரியளவில் தகவல் தொழில் நுட்பங்களோ, தொடர்பு ஊடகங்களோ இல்லாத காலத்தில் தோன்றிய இந்த டாடாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அமெரிக்கா, பாரிஸ், நெதர்லாந்து, ஜார்ஜியா, பெர்லின், யூகோஸ்லாவியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா.. என்று உலகம் முழுக்கப் பரவியது. 1916ல் டாடாயிஸத்தின் அறிக்கை (Dada Manifesto) வெளிவந்தது. 1920 ல் ஜெர்மனில் நடந்த சர்வதேச டாடா கண்காட்சிக்கு அழைக்கும் விதமான விளம்பரப் பதாகையாக “டாடா குதிரையில் பயணம் செய்ய வா..’ என்று பொருள் படும்படி, “எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருக..’ என்று எழுதிய கவிதை இந்தக் கண்காட்சிக்கான விளம்பரப் பதாகையாகவே மாறியது.
(பின்னாளில் இதன் அடுத்த கட்ட வளர்ச்சி உலகப்புகழ் பெற்ற சர்ரியலிசமாக உருவானது. மாற்றம் என்பது முடிவில்லாதது.)
இந்த இடத்தில், ஹேஷ்டேக்கின் தந்தை கிறிஸ் மெசினா சொன்னது ஞாபகம் வருகிறது: அதாவது, தனது ஹேஷ்டேக் குறியீட்டை “ட்ரோஜான் குதிரையாக” உருவகித்திருந்தார்.
அவர் எந்த இடத்தில் எந்தப் பொருளில் இதைச் சொன்னார் என்பதை விடுத்து, முன்னும் பின்னும் கத்தரித்து, இந்த உருவகத்தை மட்டும் எடுத்து இங்கு முன்வைத்துப் பேசுகிறேனா என்றில்லாமல், முழுமையாக அவர் சொன்னதைப் பார்க்கலாம். ட்விட்டர் அவரது ஹேஷ்டேக்கை நிராகரித்து விடுகிறார்கள். இருந்தாலும் மனம் தளராமல், மென்பொருள் தொழில்நுட்ப நண்பர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து, ஹேஷ்டேக் நிரலாக்கத்தை எழுத வைத்து, அதை நுட்பமாக ட்விட்டர் தளத்திற்குள் நுழைக்க வைத்து… அதன் பிறகு, “அந்த ஹேஷ்டேக், ட்ரோஜான் குதிரையில் உள்ள ரோமானியர்கள் போல் அந்த மென்பொருள் தயாரிப்புகளில் இருந்தது..’ என்கிறார்.
இப்படி, ஹேஷ்டேக், ட்ரோஜான் குதிரை என்றால்,
டி ஹேஷ் “பச்சைக்குதிரை!”. ஆம், எம் 2000 ஆண்டு தமிழ் மரபில் உருவான ‘பச்சைக்குதிரை’ விளையாட்டு! இந்த ஆட்டத்தில், ரோமானிய வீரர்களைத் தமக்குள் மறைத்து வைத்திருக்கும் ஒரே பரிமாணம் கொண்ட ட்ரோஜான் குதிரையும், பல்வேறு ரூபங்களில் சங்கிலிக் கண்ணிகளாக இருக்கும் பல பரிமாணங்கள் கொண்ட பச்சைக் குதிரையும் மாறி மாறி விளையாடுவார்கள்! (அடுத்த பக்கத்தில் வெளிவந்திருக்கும் பச்சைக் குதிரை பற்றிய என் குறுநாவலைப் படியுங்கள்)
ஸ்ரீகாந்த்: ஓ… எல்லாம் சரி. இதை எப்படி இம்ப்ளிமென்ட் செய்வீர்கள்?
கௌதம்: மிக மிக பயங்கரமான சவாலான விஷயம்தான் இது. அதற்கென்ன செய்வது? முதன் முதலில் ஹேஷ்டேக்கைக் கண்டு பிடித்த கிறிஸ் மெசினாவே 7 வருடகாலம் காத்திருந்தார். இத்தனைக்கும் அவர், பின்புலம் என்பது மிகவும் பிரம்மாண்டமானது, சகல விதத்திலும் பிளஸ் ஆகவே அமைந்திருந்தது. அமெரிக்கர், வெள்ளை இனத்தவர், இணையத்தின் தாதாவான கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராகப் பணிபுரிந்தவர், புதிய புதிய ஐடியாக்கள் கொண்ட ஸ்டார்ட் அப்களை நிறுவியவர், உலகம் முழுக்க உள்ள இணையத் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் நட்பில் இருந்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக, ட்விட்டர் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்ததன் விளைவாய், ஹேஷ்டேக் தொழில் நுட்பம், ட்விட்டர் தளத்தின் செயல்பாட்டு தொழில்நுட்பத்தில், எந்தத் தங்கு தடையுமில்லாமல் பதிவேற்றம் ஆகியிருந்தது. இத்தனை இருந்தும், ஆனானப்பட்ட மெசினாவுக்கே அங்கீகாரம் கிடைக்க 7 வருடங்கள், அவரும், அவரது உலகம் தழுவிய தொழில்நுட்ப வல்லுந நண்பர்களும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது என்றால், சகல விதங்களிலும் மைனஸ் ஆகியிருக்கும் என் முயற்சி என்ன ஆகும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
முதலில், டி ஹேஷ் என்னும் இந்தக் குறியீடு இணையத்தில் ஜெனரேட்டே ஆகாது. இதன் ஃபைல் அதிகாரபூர்வமான டிஹேஷ் இணையதளத்தில் இருக்கும்.
பயனாளர்கள், அதை தங்களது கணினி, மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து, தங்களது வலைப் பக்கங்களில் பதிவிடலாம். பதிவுகளுடன் இணைத்து எழுதலாம். அந்த வலைப்பக்கத்தை வாசிக்கும் பிற நண்பர்களுக்கு அது புலனாகும். அதே சமயம், இணைய இதழ்களில் எழுதும் எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர்கள், இணைய இதழ்களுக்கு இந்த டி ஹேஷை இணைத்து கட்டுரைகள் எழுதி அனுப்பினால், அந்த இதழ் நிர்வாகம், முதலில் இந்த டி ஹேஷ் பைலை தங்களது இணையதள தொழில்நுட்பத்தில் பதிவேற்றம் செய்து விட்டுத்தான் அந்தக் கட்டுரைகளை வெளியிட முடியும்.
இப்படியான, தொடர்ச்சியான போக்கில், உலகப்புகழ் பெற்ற அச்சு ஊடகங்களும், இணைய ஊடகங்களும் அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தால், அந்தக் குரல் எல்லாம் வல்ல பெரியண்ணன்களான பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணைய சமூக ஊடகங்களின் செவிகளில் விழுந்தால், அவர்களது கடைக்கண் பார்வை அசைந்தால், அதன்பின்னர்தான் டி ஹேஷின் புரட்சி ஆரம்பமாகும். இறுதியாக, google+ ஏற்றுக் கொண்டால் இணையத்தின் எல்லா நிலைகளிலும் செயல்பட ஆரம்பித்து விடும், பொறியாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும், விசைப் பலகையில், டி ஹேஷ் கீ வடிவமைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதுதான் சவால்!
என் வாழ்க்கை முழுக்கவே, இது போன்ற இமயம் தழுவிய சவால்களோடு விளையாடுவதுதான் எனக்குப் பிடித்தமான கேம்! “அசாத்தியமான இந்த ஆட்டத்தில், காய்களை நகர்த்தும் ஆட்டக்காரர்கள், ஆடுகளத்துக்கு வெளியே தானிருக்கிறார்கள்..” என்கிறான் ப்ளெமிஷ் மொழி நாவலாசிரியரான ஜோஸ் வண்டேலு.
ஸ்ரீகாந்த்: இறுதியாக, டி ஹேஷ் குறித்து, மானுட சமூகத்திற்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?
கௌதம்: ஆதரவு தாருங்கள். இதன் ஃபைல் அதிகார பூர்வமான டி ஹேஷ் இணைய தளத்தில் www.dhash.tech இருக்கிறது. சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்படும் முற்போக்காளர்கள், பெண்ணியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், போராளிகள், ஆய்வாளர்கள், வணிக ஊக்குநர்கள்.. என அனைத்துப் பயனாளர்களும், அதை தங்களது கணினி, மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து, தங்களது வலைப் பக்கங்களில் பதிவிட்டு ஆதரவு தாருங்கள். சமூக ஊடகங்களில் அங்கீகரிக்கச் சொல்லி குரல் எழுப்புங்கள்.
சமூக ஊடகங்களில் இப்போதைக்கு இதை பதிவிட முடியாது. ஆகவே, வேறு வழியில் முயலலாம். அதாவது, போட்டோ ஷாப்பில் ஒரு இமேஜ் போல உருவாக்கி வெளியிடலாம்.
உதாரணமாக, DIsupportDhash DSupportDhash DAcceptDhash DIloveDhash DNeoBoomDhash DNewRevolutionDhash என்று ஆதரவு தெரிவிக்கும் முகமான டிஹேஷ்களை வடிவமைத்து வெளியிடுங்கள்.
மேலும், அவர்களது அங்கீகாரத்திற்குக் காத்திருக்காமல், டிரெண்டிங்கில் என்ன ரீதியான சமூக விஷயங்கள் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றனவோ, அதற்கேற்ப டிஹேஷ்களை போட்டோ ஷாப் இமேஜ்களாக உருவாக்கி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்.
எம் தமிழ் சமூகத்திற்கும், இந்திய சமூகத்திற்கும், மற்றும் புதுமைகள் எங்கெல்லாம் உருவானாலும், அவைகளை திறந்த மனதுடன் வாழ்த்தி வரவேற்று அங்கீகரித்துக் கொண்டாடும் உலக சமுதாயத்திற்கும் என் பணிவான வணக்கங்களை முன்வைத்து, புரட்சிகரமான கண்ணோட்டத்தில் உருவாக்கி யிருக்கும் இந்த நவீனக் குறியீட்டுக்கு ஆதரவு தாருங்கள் என்று வேண்டுகிறேன்.
****
*ஸ்ரீகாந்த் கந்தசாமி, இணையம் சார்ந்த தொழில்நுட்ப ஈடுபாட்டாளர், இணையதள உருவாக்குனர் மற்றும் உன்னதம் இதழின் அறிமுக எழுத்தாளர், தற்போது இணைய ஊடகங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்.