- ஆர் கார்த்திக்
கௌதம சித்தார்த்தனின் “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை மொழி பெயர்ப்புகளுக்கான Textbook ஒன்றை எழுதி வைத்துவிட்டுத்தான் கௌதம சித்தார்த்தர் கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார். இது மிகைப்படுத்தல் இல்லை. உண்மையாகவே அவ்வாறு தான் உணர்கிறேன். பனிச்சருக்கின் இலாவகத்தை ஒரு கட்டுரை வாசிப்பாளனுக்கு வழங்க இயலும் என்பதனோடு மொழி பெயர்ப்பாளர் எவ்வாறானவனாக இருக்க வேண்டும் என்பதை தன் அனுபவத்திலிருந்து எழுதியிருக்கிறார். ஒரு சொல்லை தேர்ந்தெடுப்பதற்கு அம்மொழியின் பண்பாடு அதன் இலக்கிய இலக்கண பின்னணி, நிலவியல் சூழல் மற்றும் கோட்பாட்டு பின்புலமும் அவசியமாகிறது. எந்திரதனமாக நான்கு அகராதியை பார்த்து முடித்துக் கொள்வதற்கல்ல.
***
கடந்த அக்டோபர் 30, 2022 ஞாயிறு அன்று, உன்னதம் நடத்திய மொழிபெயர்ப்பு உரையாடல்கள் விழாவில் என் “ஹெராக்ளிட்டஸ் நதிக்கரை” நூல் வெளியிடப்பட்டது. மூத்த மொழிபெயர்ப்பாளர் பேரா. எத்திராஜ் அகிலன் வெளியிட, இளம் தலைமுறை மொழிபெயர்ப்பாளர் கார்த்திகைப் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
கடந்த 40 வருடங்களாக, மொழிபெயர்ப்பு படைப்புகளை வாழ்வின் ஆதார சுவாசம் போல சுவாசித்துக் கொண்டிருந்த நீட்சியில், சமீபகாலமாக ஒரு சில கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கினேன். அந்த கணங்களில் எனக்குள் நிகழ்ந்த பல்வேறு விதமான அனுபவங்கள், சிக்கல்கள், சவால்கள் அவைகளை எதிர் கொண்ட விதம் குறித்தெல்லாம் விரிவாக சில கட்டுரைகள் எழுதினேன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்!
அநேகமாக கார்த்திக் சொன்னது போல, இந்தக் கருத்தரங்குக்கான விதை இந்த நூலிலிருந்துதான் துளிர்த்தது என்று சொல்லலாம்.
நூல் குறித்து மதிப்புரை எழுதியுள்ள ஆர் கார்த்திக், கல்குதிரை இதழில் வெளிவந்த சாமுவேல் பெக்கட்டின் கவிதைகளை மொழியாக்கம் செய்தவர். உமது பார்வைக்கு மிக்க நன்றி இளம் மொழிபெயர்ப்பாளனே!
இந்த நூல் குறித்து தற்கால புத்தம் புதிய இளம் மொழிபெயர்ப்பாளர்கள், அவசியம் இந்த நூலைப் படித்துவிட்டு உங்கள் பார்வைகளை முன்வைக்க வேண்டுகிறேன்.
நூல் வேண்டுவோர் தொகையை Google Pay 9940786278 செய்ய வேண்டுகிறேன்
விலை 150. (கூரியர் செலவு இலவசம்)
***