அக்டோபர் 30 ஞாயிறு அன்று உன்னதம் நடத்தும் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழா கருத்தரங்கிற்கான நிகழ்ச்சி நிரல்.
விழா இடத்துக்கு வருவதற்கான வழித்தடங்கள்!
அக்டோபர் 30 ஞாயிறு அன்று உன்னதம் நடத்தும் “மொழிபெயர்ப்பு உரையாடல்கள்” விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களின் கவனத்திற்கு:
விழா நடக்கும் இடம் : நலம் மஹால், கோபி ரோடு, முனியப்பம்பாளையம் பிரிவு, அந்தியூர் (ஈரோடு)
நேரம் : மிகச்சரியாக காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 7.00 மணிக்கு முடிவடையும்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலையில் 11.00 மணிக்கு தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ்.
மாலையில் 5.00. மணிக்கு தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ்.
எனவே நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
வழித்தடங்கள் :
சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி மார்க்கமாக வரும் நண்பர்கள் ஈரோடு போக வேண்டியதில்லை. நேரடியாக பவானி பேருந்து நிலையத்திற்கு வந்துவிடலாம்.
அங்கிருந்து அந்தியூருக்கு ஒரே பஸ். (18 கி மீ தொலைவு).
சென்னை, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரிமார்க்கமாக வரும் நண்பர்கள் (ரயில் அல்லது பஸ் எதில் வந்தாலும்) ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துவிடலாம்.
அங்கிருந்து அந்தியூருக்கு ஒரே பஸ். (28 கி மீ தொலைவு).
கோவை, பொள்ளாச்சி, கேரளா மார்க்கமாக வரும் நண்பர்கள் ஈரோடு போக வேண்டியதில்லை. நேரடியாக கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து விடலாம். அங்கிருந்து அந்தியூருக்கு ஒரே பஸ். அதில், அந்தியூருக்கு சில நிறுத்தங்களுக்கு முன்பாகவே முனியப்பம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப். எதிரில் ‘நலம் மஹால் மண்டபம்’.
மற்றபடி, அந்தியூர் பேருந்து நிலையம்தான் முக்கியமான சென்டர் பாயிண்ட்.
அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து கோபி செட்டிபாளையம் போகும் அனைத்து பஸ்களும் நம் விழா இடத்தின் வழியாகத்தான் போகும். (1 கி மீ தொலைவு.)
முனியப்பம்பாளையம் பிரிவு என்ற ஸ்டாப்பிங்கில் இறங்கினால், எதிரில் ‘நலம் மஹால் மண்டபம்’.
****