Translation Talks ரிங் டோன் அறிமுகம்!
மொழிபெயர்ப்புக் கலை என்பது அடுத்த இளம் தலைமுறைக்குக் கொண்டு போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வெறுமனே கருத்தரங்குகளை மட்டுமே நடத்திக் கொண்டிருப்பது மட்டும் போதாது, தாங்கள் ஒரு சிற்றிலக்கியக் குழுவை உருவாக்கி தங்களுக்கான மொழிபெயர்ப்பாளர்களை இணைத்துக் கொண்டு தாங்கள் மட்டுமே மொழிபெயர்ப்பின் உன்னதங்களைப் பற்றி தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பதும் தவறு. தவறு மட்டுமல்லாது, இது ஒரு ஆதிக்கப் போக்கு!
இது போன்ற விஷயங்களிலிருந்தெல்லாம், அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பு படைப்பாளியும், வாசகனும் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்லாது, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியும், மொழிபெயர்ப்பு நுட்பங்களும் பேரளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சூழல் இது. இந்தச் சூழல் மீது அடுத்த நவீன தலைமுறைக்கு – இணையத் தலைமுறைக்கு ஒரு வேட்கை, தாபம் ஒரு Passion வரவேண்டும் என்று நினைத்ததன் விளைவு, Translation Talks ரிங் டோன்!
இந்த ரிங் டோன் 2 விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் உங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
1. Translation Talks : இது, வருகின்ற அக்டோபர் 30 ஞாயிறு அன்று நடக்க இருக்கும் மொழிபெயர்ப்பு உரையாடல்களுக்கான கவன ஈர்ப்பு ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரிங் டோன்!
2. Translation Talks II : இது, மொழிபெயர்ப்பு சார்ந்த உணர்வுகளை, உத்வேகத்தை, ரசனையை, உங்களுக்கும், உங்களது நண்பர்களுக்கும் எப்போதுமே ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரிங் டோன்!
ஆம், நண்பர்களே, இந்த நவீன இணையச் சூழலில் அப்படித்தான் கொண்டாடவேண்டும்!
வாருங்கள் கொண்டாடுவோம்!
*****