• Wed. Nov 29th, 2023

மொழிபெயர்ப்புக் கருத்தரங்க லோகோ வெளியீடு

ByGouthama Siddarthan

Oct 5, 2022

உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கான தலைப்பும் லோகோவும் இன்று இணைய வழி நிகழ்வாக வெளியிடப்பட்டது.

வெளியிட்டவர் : நாகரத்தினம் கிருஷ்ணா
பிரான்சில் வசிக்கும் இவர், பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்ப்பவர். பிரெஞ்சு மொழியின் முக்கியமான சர்வதேச இலக்கிய ஆளுமைகளான காம்யூ, லெ.கிளேஸியொ, மார்கெரித் துராஸ் மற்றும் பல ஆளுமைகளின் எழுத்துக்களை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தவர். மேலும், பிரெஞ்சு மொழியில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்து தமிழை சர்வதேச அரங்கிற்கு அறிமுகப்படுத்துபவர்.
மற்றும், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என, தனது சொந்தப் படைப்புகளாக 20 க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ள இவர் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டுள்ள படைப்பாளி.

*******
Translation Talks
மொழிபெயர்ப்பு உரையாடல்கள்

மொழிபெயர்ப்பின் அடுத்த கட்டத்தை நோக்கி..

இணையத்தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக மொழிபெயர்ப்புக் கலை எதிர்கொள்ளும் சவால்கள்.

மொழிபெயர்ப்புப் பதிப்புரிமைகளின் சிக்கல்களும், அவைகளை எதிர் கொள்ளும் வழிகளும்

சர்வதேச மொழிகளில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு நகரும் தருணங்கள்.

மொழிபெயர்ப்புச் சந்தைகளில் குமியும் சர்வதேச ஜோடனைகளினூடே அற்புதமான மலரைத் தேடும் தீவிர வாசகனின் தேடுகை என்பது என்ன?

சர்வதேச இலக்கிய அரங்கில் தமிழ்மொழியின் இடம் என்ன?

இப்படியான மொழிபெயர்ப்பு சார்ந்த பலவேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் உரையாடல்களை உள்ளடக்கிய ஒரு அடையாளச் சின்னமாக இந்த லோகோவும் தலைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்பாளிகள், வாசகர்கள், இந்த பின்புலத்துடன் இந்தத் தலைப்பைக் கையாளவேண்டும் என்று இந்தச் சின்னத்தையும் தலைப்பையும் இங்கு முன்வைக்கிறது உன்னதம்.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page