உன்னதம் நடத்தும் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கான தலைப்பும் லோகோவும் இன்று இணைய வழி நிகழ்வாக வெளியிடப்பட்டது.
வெளியிட்டவர் : ஷஹிதா
தமிழில் கவனம் பெற்று வரும் இளம்தலைமுறை மொழிபெயர்ப்பு ஆளுமை.
ஆப்ரிக்க – அமெரிக்க எழுத்தாளரான ஆலிஸ் வாக்கரின் ‘அன்புள்ள ஏவாளுக்கு’, ஆப்கன் – அமெரிக்க எழுத்தாளரான காலித் ஹுசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’, ஆப்ரிக்க – ஆஸ்திரேலிய எழுத்தாளரான ஜே.எம். கூட்ஸியின் ‘மானக்கேடு’ ஆகிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பல மொழிகளின் இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
*******
Translation Talks
மொழிபெயர்ப்பு உரையாடல்கள்
மொழிபெயர்ப்பின் அடுத்த கட்டத்தை நோக்கி..
இணையத்தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக மொழிபெயர்ப்புக் கலை எதிர்கொள்ளும் சவால்கள்.
மொழிபெயர்ப்புப் பதிப்புரிமைகளின் சிக்கல்களும், அவைகளை எதிர் கொள்ளும் வழிகளும்
சர்வதேச மொழிகளில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு நகரும் தருணங்கள்.
மொழிபெயர்ப்புச் சந்தைகளில் குமியும் சர்வதேச ஜோடனைகளினூடே அற்புதமான மலரைத் தேடும் தீவிர வாசகனின் தேடுகை என்பது என்ன?
சர்வதேச இலக்கிய அரங்கில் தமிழ்மொழியின் இடம் என்ன?
இப்படியான மொழிபெயர்ப்பு சார்ந்த பலவேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் உரையாடல்களை உள்ளடக்கிய ஒரு அடையாளச் சின்னமாக இந்த லோகோவும் தலைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்பாளிகள், வாசகர்கள், இந்த பின்புலத்துடன் இந்தத் தலைப்பைக் கையாளவேண்டும் என்று இந்தச் சின்னத்தையும் தலைப்பையும் இங்கு முன்வைக்கிறது உன்னதம்.