இலக்கியத்தேடல் கொண்ட நண்பர்களுக்கு
வணக்கம்
கடந்த 40 வருடங்களாக உன்னதம் இதழ் உலகளவிலான இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்வித்து, மொழிபெயர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் பெருமளவில் செயல்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். இணைய வளர்ச்சியில்லாத காலகட்டங்களில், சிறந்த தரமான படைப்புகளைத் தேடி அலைந்தது, அதற்குரிய மொழி பெயர்ப்பாளர்களைத் தேடியது, பொருள் விரயம், நேர விரயம், இப்படிப் பல்வேறு இன்னல்களையும், அல்லல்களையும் கடந்தே தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உருவாகின, இந்த உருவாக்கத்தின் விளைவாக தமிழின் படைப்பு மொழி பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக,
தற்போதைய கால கட்டம் இணையத் தொழில்நுட்பமும், மொழிமாற்றச் செயல்பாடுகளும் மிக மிக வளர்ச்சியடைந்து, அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அபரிமிதமான கால கட்டம்.
ஒரு காலத்தில், பெரும் போராட்டங்களுடன் தேடி அலைந்த உலகளாவிய படைப்பு, இன்று கைச் சொடுக்கில், நம் முன்னே வந்து விழுகிறது. தமிழ் மொழி அண்டை மாநிலமான மலையாளம் போன்ற ஒரு மொழியில் வருவதே ஆகப்பெரிய ஜென்ம சாபல்யம் என்று கொண்டாடிய காலங்களைப் பின்னுக்குத் தள்ளி, உலக மொழிகளில் எல்லாம் தமிழ் படைப்புகள் வருவதற்கான தருணங்கள் உருவாகின்றன.
இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு, எதிர் வருகின்ற அக்டோபர் 30 ஞாயிறு அன்று, மொழிபெயர்ப்பு சம்பந்தமான ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது உன்னதம்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் தமிழ் படைப்பு மொழியின் திசைவழியிலிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் வரை தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். இளம் தலைமுறை மொழிபெயர்ப்பாளர்கள் விவாதிக்கும் கலந்துரையாடல் தற்கால மொழிபெயர்ப்புத் துறையில் பல்வேறு புதிய திறப்புகளை திறந்து விடும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்பாக்கங்களில் ஆர்வமும் அதீத ஈடுபாடும் கொண்டுள்ள வாசகர்களும் படைப்பாளிகளும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட இருப்பதால் உங்களது வருகையை உறுதி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
சக்திவேல்: 9976951585
பாரி: 9500384307
கௌதம சித்தார்த்தன்: 9940786278
மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பெரிய பதிப்பகம் என்று பெயர்பெற்ற பதிப்பகங்களால் மொழிபெயர்ப்பாளர்கள் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையும் பேசவேண்டும்.