- கௌதம சித்தார்த்தன்
அன்று வழக்கிற்கு மாறாக மேற்கே எழுகிறது சூரியன்
கிழக்கில் விழுகிறது என் நிழல்
சரியும் அந் நிழலை ஏந்துவாரின்றிக் கவியும் நிலங்களற்ற சூன்யம்
கவ்விப் பிடிக்க முற்படும் கணமொன்றில்
படீரென வெடிக்கிறது சிரசு
ஓராயிரம் வண்டுகளின் சிறகடிப்பு வானேகிச் சுழல
காலடியில் தாகிக்கும் நிலம் மீறி
திசைகள் மிரள
பற்றி எரியும் பெரு நெருப்பில்
செக்கச் சிவந்து கனிந்த என் நிலத்தின் வெள்ளரிப்பழம்
சூரியக்கோளமாக சுடர்ந்தெழுகிறது கிழக்கு வாசலில்…
***