- கௌதம சித்தார்த்தன்
என்னைச் சந்திக்க ஆர்வம் இருப்பதாகவும், ஆனால், என் எழுத்துக்களை பெரும்பான்மையாகப் படித்ததில்லை ஆதலால் தயக்கமாக இருக்கிறது என்று சொல்லும் திறந்த மனம் கொண்ட வாசகனே.. ஒரு எழுத்தாளனை சந்திப்பது என்பதற்கு முன் அவனது படைப்புகளைப் படித்திருப்பது முக்கியம்தான். ஆனால், படித்திருப்பது என்பது என்ன?
அவனது எழுத்துக்களை படிக்காமல் கேள்விப்பட்டதை வைத்து வெறுமனே ஜல்லியடிப்பது, எழுத்தாளனுடன் டீ குடித்தது.. தண்ணியடித்தது.. மொக்கை போட்டது.. அதைப்பற்றி சக நண்பனிடம் ஜம்பமாக பீலா விடுவதல்ல விஷயம். அவனது எழுத்துக்களின் ஆன்மாவை உள்வாங்கியிருப்பதுதான் வாசிப்பின் தகுதி. பல எழுத்தாளர்களின் எழுத்துலகம் இப்படியாக நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.. இப்படியான மேலோட்டமான வாசிப்புகள் சரியானதல்ல; வாசிப்பின் பிரக்ஞை நிலையே முக்கியமானது.
ஆனால்,
என்னைப் பற்றி எந்தவித பிம்பமும் இல்லாது ஒரு காலிக் கோப்பையாக நீ வந்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஒரு ஜென் கவிதையை உனது காலிக் கோப்பையில் தேநீராகப் பகிர்ந்து, அருந்திவிட்டு நாம் பிரியலாம்.அதன்பிறகு, அந்தக் கோப்பைத் தேநீரின் கதகதப்பு வாசிப்பின் பிரக்ஞை நிலையை உனக்கு அறிமுகப்படுத்தி விடும்…
****