மதுரையில் வருகிற 23/09/2022 வெள்ளிக்கிழமை முதல், 03/10/2022 திங்கட்கிழமை வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் “புத்தகத் திருவிழா” நடைபெறவிருக்கிறது.
இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, எழுத்து, நாடகம், கதை சொல்லுதல், காகிதக்கலை, ஓலைக்கலை, போன்ற பல்வேறு பயிலரங்குகள் நடைபெற இருக்கின்றன.
தினமும் மதியம் 02:00 மணிமுதல் 03:00 மணிவரை குழந்தைகளுக்கான திரைபடங்கள் “சிறார் சினிமா” திரையிடப்பட இருக்கின்றன.
தினமும் ஒருமணி நேரம் நடக்கவிருக்கும் இந்நிகவில் பலநாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்கள் இயக்கிய குழந்தைகளுக்கான சர்வதேச குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களும் திரையிடப்படுவதோடு மாணவர்களுடனான கலந்துரையாடல்களும் நடைபெறும்.
புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அரங்கில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் அனைத்து மாணவ மாணவியரும் கலந்துகொள்ளலாம்..
அதீதன்,
மதுரை.