அன்புள்ள கௌதம் அவர்களுக்கு
நல்ல ஒரு think tank ஐ வழி நடத்தும் பொறுப்பு உன்னதம் விழா கூட்டத்தில் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. தவறவிட்டுவிட வேண்டாம். நாங்கள் உங்கள் துணை வருவோம்.
விழாவும், விழாவில் பேசப்பட்ட உரைகளும் சிறப்பாக இருந்தன. விழாவில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. எனது 4 தொகுப்புகளில் அப்போது 3 தொகுப்புகள்தான் தங்களுக்குத் தர எனக்கு வாய்த்தது. அந்த விடுபட்ட தொகுப்பு “காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள்”. அது கிடைக்கும் பட்சத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். மற்ற 3 தொகுப்புகளையும் நன்கு வாசித்து விமர்சனத்தை உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்தால் மகிழ்வேன். மற்றபடி விழாவில் அன்றைய தங்களின் உபசரிப்புக்கு மிக்க நன்றி.
தேவ ரசிகன்
பட்டுக்கோட்டை
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமான நண்பர் கௌதமசித்தார்த்தன் அவர்களின் இன்றைய அபரிமிதமான வளர்ச்சி என்னை அண்ணாந்துதான் பார்க்க வைக்கிறது..! தமிழ் மொழியின் நவீன இலக்கியம், பின்நவீனத்துவம், தொன்மம், தற்கால அறிவியல் புனைவு இலக்கிய வகைகளின் இனிவரும் நூற்றாண்டுகளின் வரலாற்றில் கௌதம சித்தார்த்தன் என்ற பெயர் தவிர்க்கவே முடியாத நிலைத்த புகழைக் கொண்டிருக்கும்..! குறிப்பிட்ட இந்த இலக்கிய விழாவின் மிக முக்கிய அம்சம், தற்கால நவீன,பின்நவீனத்துவத்தின் படைப்பாற்றல் குறித்த செறிவுடனும், சிறப்பான கருத்தாக்கங்களின் வெளிப்பாடுகளுடனும் வந்திருந்த இளைஞர்கள்தான் என்பதே, கௌதமசித்தார்த்தன் அவர்களின் ஆளுமைக்கான சான்று. உணர்ச்சிப்பெருக்கில் மிதந்துகொண்டிருந்த அவர், தனது முழுமையான உரையாடல்களை முழுவதுமாக அரங்கேற்ற நேரம் இடந்தரவில்லை என்பது ஏமாற்றமளித்தது. ஆனாலும், விழாவின் குறிக்கோள் 99% இனிதாக நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். வாழ்த்துகள் ..!!
ஆர் வி ராஜேந்திரன்
சேலம்
சிறப்பான பதிவுகள் ..! தொடரட்டும்..!! வாழ்த்துகள்..!!! – ஆர்.வி.ஆர்.