நன்பர்களுக்கு வணக்கம்
செப்டம்பர் 17 அன்று என் பிறந்த நாள்!
பிறந்த நாளை முன்வைத்து ஈரோட்டில் ஒரு இலக்கிய நிகழ்வை நண்பர்களுடன் இணைந்து நடத்தலாம் என்று நண்பர் ஸ்ரீகாந்த் கந்தசாமி மிகவும் ஆர்வமுடன் கோரிக்கை வைத்தார்.
நண்பர் சக்திவேலிடம் இது குறித்து பேசினேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.
நண்பர் பாரி, பெருமளவில் வரவேற்றார்.
உடனே அடிப்படை வேலைகள் துவங்கின.
ஸ்ரீகாந்த், இந்த நிகழ்வை பெரும் விழாவாக மாற்றவேண்டும் என்றார். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. குறைந்த பட்சம் தீவிர நவீன இலக்கியம் சார்ந்த 20 பேர் வந்தால் போதும். ஒரு கலந்துரையாடல் நடத்துவோம் என்று சொல்லிவிட்டேன்.
ஆனால், வெறும் கலந்துரையாடல் மட்டும் போதாது. இன்னும் ஓரிரு அமர்வுகளை இணைக்கலாம் என்று கட்டாயப்படுத்தியவர் ஸ்ரீகாந்த்.
அவரது விருப்பத்தின் பேரில்தான் நூல் வெளியீடு அமர்வை இணைத்தோம்.
நூல் வெளியிட வருகை தரும் “குதிரைவால்” பட கதை ஆசிரியரான நண்பர் ராஜேஷ் க்கு மனமார்ந்த நன்றி!
நிகழ்வில் வெளியிடும் நூல், “காலப்பயண அரசியல்” என்னும் விஞ்ஞான புனைவு இலக்கியம் சார்ந்த விமர்சனக் கட்டுரை. இது சர்வதேச மொழிகளில் (ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ், சீனம்,ரோமானியன்,போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில்) வெளிவந்துள்ளது. இதுவரை தமிழில் வெளியிட வில்லை.
இப்பொழுது முதன்முறையாக என் பிறந்தநாள் வெளியீடாக வெளியிடுகிறேன்.
நண்பர்கள் நிகழ்வுக்கு வந்து இந்த நூலை கொண்டாட வேண்டுகிறேன்!
உன்னதம் இலக்கிய விழா
நூல் வெளியீடு – நூல் அறிமுகம் – கலந்துரையாடல்
இடம்: நியூ டெக் எஜிகேசன் சென்டர், காளிங்கராயன்பாளையம், பவானி.
நாள்: 17.9.2022 சனிக்கிழமை நேரம்: 10.30 AM — 6.00 PM
இந்த இடம், புகழ்பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ளது. பவானி காளிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 100 மீட்டரில் உள்ளது.ஆகவே, சேலம், பாண்டிச்சேரி பக்கமிருந்து வரும் நண்பர்கள் ஈரோடு போக வேண்டியதில்லை. பவானியிலேயே இறங்கி வந்து விடலாம். மதுரை தஞ்சாவூர் பக்கமிருந்து வரும் நண்பர்கள் ஈரோட்டிலிருந்து பவானி பஸ் பிடித்து, பவானி காளிங்கராயன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வந்து விடலாம்.
சக்திவேல்: 9976951585 பாரி: 9500384307 கௌதம சித்தார்த்தன்: 9940786278