- முத்துசாமி நடேஷ்
எந்தவித சத்தமும் இல்லாமல் மௌனமாக தனுஷ்கோடி மீது ஏதோ ஒரு ஆழமான இடத்தில் எனக்கு படு பயங்கரமான மரியாதை இருந்திருக்கிறது என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் தெரிகிறது.
நேற்று எனது முதல் நடிகன் கார்த்திகேயன் முருகன் அவனுடன் நீண்ட நேரம் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன் தனுஷ்கோடி பற்றி முதன் முதலில் கூத்துப்பட்டறை ரெபர்ட்டரி ஆரம்பித்தபோது முத்துசாமி தனுஷ்கோடியை ஆசிரியராக நியமித்து பிறகொரு இந்திரஜித் மற்றும் நிரபராதிகளின் காலம் ஆகிய நாடகங்களை இயக்குவதற்காக சோழமண்டலத்தில் விஸ்வநாதன் அவர்களது வீட்டை வாடகைக்கு எடுத்து சமையல் செய்வதற்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்து நடிகர்கள் முழு நேரமாக அங்கேயே வாழும் விதமாக ஏற்பாடு செய்து விட்டனர்.
ரியலிசம் என்றால் என்ன என்று இந்தியர்களுக்கு தெரியவே தெரியாது அது போன்ற ஒரு மன அமைப்பு இந்தியர்களுக்கு இல்லவே இல்லை அது நேரடியாக ஆங்கிலேயர்கள் இடத்தில் இருந்து நமக்கு கடத்தப்பட்ட ஒரு சிந்தனைப் போக்கு ஆகும்.
நான் சிறு குழந்தையாக இருந்த பொழுது மார்த்தா கிரகம் ஆடிய நாட்டியத்தை ஒரு சினிமாவாக us கல்ச்சுரல் சென்டர் சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் வளாகத்தில் சென்று பார்த்து இருக்கிறேன் எனது அப்பா முத்துசாமி என்பதினால் எனக்கு ஏகப்பட்ட நன்மைகள் கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது ஆரம்பித்துவிட்டது என்பது கண்டிப்பாக பெரிய கடவுள் அளித்த வரமாக தான் தோன்றுகிறது.
மெட்ராஸ் பிளேயர்ஸ் செய்த ஏகப்பட்ட நாடகங்களை முத்துசாமி முதன் முதலில் நாடகம் எழுத ஆரம்பித்த பிறகு தனது நாடக அனுபவத்தை வளர்த்துக் கொள்வதற்காக தினமும் ஏதோ ஒரு நாடக நிகழ்ச்சிக்கு மாலை நேரங்களில் சென்று விடுவார் அப்போது அனேகமாக நானும் கூட செல்வது வழக்கமாக இருக்கும் அதுபோல நான் ஆரம்ப காலத்திலேயே ரியலிஸ்டிக் நாடகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் விதமாக என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தனுஷ்கோடி அவர்கள் ரிலீஸ் டேட் நாடகம் செய்து கொண்டு இருக்கிறார் என்பது கூட தெரியாமல் பார்த்தது உண்டு.
பிறகு வெகு நாளைக்குப் பிறகு இதுபோன்ற சிந்தனை முறைகள் எங்கிருந்து வந்தது இந்தியர்களுடைய சிந்தனை முறை இது தமிழர்களுடைய சிந்தனை முறை எது என்று பிரித்துப் பிரித்துப் பார்க்கும் பொழுது நமக்கு வேறு விதமான படைப்பாற்றல் முறைகள் மட்டுமே கை கண்ட கலையாக இருந்து வந்தது என்பது புரியும் பொழுது எனக்கு 40க்கு மேல் வயதாகி விட்டது.
ஆனால் நேரடியாக வெள்ளைக்காரர்கள் இடம் இருந்து நமக்கு கிடைத்த ஒரு பெரிய பரிசு சினிமா எனப்படும் ஒரு விதமான புதிய அமைப்பு.
அதுவும் தமிழ் சினிமா நேரடியாக சிவாஜி கணேசன் அவர்கள் மூலமாக தத்ரூபமான நடிப்பு எனப்படும் போர்வையில் மெலோ ட்ராமா நாடகம் அதிகப்படியான நடிப்பு போன்ற தத்ரூபமான நடிப்பு இல்லாத ரியல் எக்ஸாம் இல்லாத ஏதோ ஒரு விதமான நடிப்பை இதுதான் தத்ரூபம் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விதமான அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அதேபோல ஓவியத்தில் கூட ராஜா ரவிவர்மா அவர்கள் உண்டாக்கி வைத்து விட்டுப் போன மிகவும் மோசமான தத்ரூப ஓவியங்களை ரியலிசம் என்று நம்பி அதை பலரும் காப்பியடித்து அதேபோல ஓவியம் திட்டம் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறோம்
தனுஷ்கோடி அவர்கள் ரியலிசம் எவ்வளவு நேர்த்தியாக புரிந்து கொண்டு அதை அவரது நடிப்பில் கொண்டு வந்து காட்டினார் என்பது அவரை நாடகத்தில் பார்த்தவர்களுக்கு தெரியும்.
அவர் நீரைக் கொண்டு வாட்டர் கலர் செய்யும்பொழுது எவ்வளவு தத்ரூபமாக எவ்வளவு சொந்தமாக தனது ஆளுமைக்கு உரித்தான ஒரு செயல்பாடாக செய்தார் என்பது 1979 ஆம் ஆண்டு நான் மெட்ராஸ் ஹாட் கிளப் சேர்ந்து ஓவியம் கற்றுக் கொள்வதற்கு முயற்சித்த போது அவர் மிகவும் பொறுமையாக ரியல்சம் வாட்டர் கலர் செய்வதை அருகில் நின்று பல மணி நேரங்கள் பார்த்தது உண்டு.
அப்பொழுது எனது நம்ம நண்பன் ரஞ்சன் டே அவர்களும் ஒன்றாக சேர்ந்து மணிக்கணக்கில் அவர் ஓவியம் செய்யும் பொழுது அவர் வாட்டர் கலர் செய்யும்பொழுது எங்களுக்காகவே அவர் செய்து காட்டியது போல உணர்ந்து நகரவே நகராமல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ஆரம்பித்து மாலை இருட்டும் வரை பெரிய பெரிய அற்புதமான பேப்பர்களில் படம் வரைந்து கொண்டு இருப்பதை தனுஷ்கோடியை ரசித்து ரசித்து பார்த்தது உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால்
அதே காலத்தில் சென்னை கலைக் கல்லூரியில் கவின் கலை கல்லூரியில் வாட்டர் கலர் சேகர் என்று ஒரு அற்புதமான வாட்டர் கலர் செய்யும் முழு நேர ஓவியர் படித்துக் கொண்டு இருந்தார். அவர் தாறுமாறாக தனது மனம் போன போக்கில் பிரமாதமான அருவ அரும்ப அரும்ப அரும்ப… அரூப ஓவியங்களை செய்வார்.
வாட்டர் கலர் செய்வதற்கு கையால் தயாரிக்கப்பட்ட பேப்பர் மிகவும் அற்புதமான பேப்பர் இந்தியாவில் செய்யப்படவில்லை அது பிரெஞ்சு ஜெர்மன் நாட்டு பேப்பர்கள் மட்டுமே படு பயங்கரமான விலையை வைத்து எல்ஐசி பில்டிங் கீழே அமைந்து இருந்த பெருமாள் கட்டி செட்டி சட்டி ஸ்டேஷனரி கடையில் கிடைக்கும்.
அவற்றை உணவுக்கு பணம் இல்லாத போது கூட வாட்டர் கலர் சேகர் அவற்றை வாங்கி கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டியில் ஊற வைத்துவிட்டு மிதக்க வைத்து விட்டு சென்றுவிடுவார். அடுத்த நாள் காலை வந்து அவற்றை பெரிய பெரிய படம் போடக்கூடிய பலகைகள் மீது கிடத்தி நாலு பக்கமும் கம் டேப் போட்டு ஒட்டி காய வைத்து விட்டு போய்விடுவார்.
பிறகு ஒரு நாள் அவரது மனம் லயித்து அந்த காகிதத்தின் மேல் பிரமாதமான வாட்டர் கலர் வண்ணங்களை குழைத்து பூசுவார்
அது கடைசியாக எப்படி வரப்போகிறது என்பது அவர் மனதிற்கு மட்டுமே தெரியும் ஆகையால் அவர் வாட்டர் கலர் செய்வது எப்படி என்ற இலக்கணத்திற்கு ஏற்ப இரண்டாவது கலரை அடியில் இருக்கும் கலர் மீது பிரமாதமாக வைத்து முடித்து விடுவார்
அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங் என்று கூறக்கூடிய அறுப ஓவியங்களை வாட்டர் கலர் சேகர் செய்ய நாங்கள் ரியலிசம் ஆக தனுஷ்கோடி அவர்கள் வாட்டர் கலர் செய்ய எங்களது பயிற்சி நாட்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களோடு அற்புதமாக அமைந்துவிட்டது.
ரஞ்சன் டே பெங்காலி ஆகையால் அவருக்கு தமிழ் படிக்க தெரியாது. தெரிந்தால் கண்டிப்பாக ஆமாம் ஆமாம் என்று கூறுவார்.
ஆனால் எனக்கு 20 வயது ஆகும்பொழுது முத்துசாமி அதிகமாக வெளியில் சென்று நாடகங்களை பார்க்கும் வேலையை குறைத்துக் கொண்டு விட்டார்.
அவரது கவனம் முழுவதுமாக தெருக்கூத்தின் மீது திரும்பிவிட்டது எனவே எனக்கு தனுஷ்கோடியின் ரியலிசம் நடிப்பை பார்த்து அனுபவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு முடிந்து போய்விட்டது.
ஆனால் ரகசியமான என்னைப் போலவே முத்துசாமிக்கும் தனுஷ்கோடி மீது அபாரமான மதிப்பும் மரியாதையும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
கூத்துப்பட்டறையில் முழு நேர நடிப்பு பட்டறை 19 88 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் பொழுது அவர்தான் நடிகர்களுக்கு முதல் ஆசான்.
அவருடைய பிறகுரு இந்தரசித்து நிரபராதிகளின் காலம் ஆகிய இரண்டு நாடகங்களுக்கும் நான் மற்றும் கலைச்செல்வன் சேர்ந்து செட் டிசைன் செய்து கொடுத்துள்ளோம். பேராசிரியர் ரவீந்திரன் அவர்கள் ஒளி அமைப்பை கவனித்துக் கொண்டார்.
அந்த இரு நாடகங்களும் சென்னை மியூசியம் தியேட்டர் உலகத்தில்கூட வளாகத்தில் கூட நடைபெற்றது என்பது ஞாபகத்திற்கு வருகிறது.
தனுஷ்கோடி அவர்களோடு நடித்த எனது முக்கிய நண்பர் பிரீத்தா கண்ணன் அவர்களது தாயார் சுதா அம்மையார் என்பதினால் தனுஷ்கோடி இயக்குகிறார் என்பதினால் பிரீத்தா என்னுடன் வந்து அந்த நாடகத்தை பார்த்தால் அப்பொழுது தான் கலை ராணியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் நாங்கள் காதலில் இருந்தோம்.
எனவே இந்திய ரியலிஸத்தின் தந்தை, வட இந்தியாவில் மனோகர் சிங் ஆகிய அற்புத நடிகர்; ஆனால் தென்னிந்தியாவில் தனுஷ்கோடி ஆவார்.
வட இந்தியாவில் மனோகர் சிங்
தென்னிந்தியாவில் தனுஷ்கோடி
இவர்களைப் பின்பற்றி இந்திய நடிப்பு இருந்தால் இன்று எவ்வளவோ அழகாக இருந்திருக்கும் ஆனால் இவர்களுக்கு புரியப்போவதில்லை.
[…] […]