உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் மீது நடந்த வன்முறைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தத் தாக்குதல், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் மற்றும் சிந்தனைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பெருங்குரலை சர்வதேச சமுதாயத்தின் முன் கண்டனக்குரலாக ஒலிக்கிறேன்.
கடந்த காலங்களில் 1990 களில், உலகம் முழுக்க சல்மான் ருஷ்டி சர்ச்சையாகிக் கொண்டிருந்தார். அவருக்கு ஃபத்வா விதிக்கப்பட்டிருந்த சூழல். அத்தருணத்தில், “என் தனியொரு உயிரின் மதிப்பு என்ன?” என்ற அவரது புகழ்பெற்ற உரை மொழியாக்கம் (பேரா.தெ.கல்யாண சுந்தரம்) செய்து உன்னதம் இதழில் வெளியிடப்பட்டது.
மற்றும், ருஷ்டியின் சிறுகதைகளான “இரத்தினச் செருப்புகளின் ஏலத்தின் போது” – தமிழாக்கம் எஸ். பாலச்சந்திரன் மற்றும் “தீப்பறவையின் கூடு” – தமிழாக்கம் திலகவதி ஆகிய சிறுகதைகளை உன்னதம் இதழில் வெளியிட்டது ஞாபகம் வருகிறது.
சுதந்திரத்தை வன்முறையால் ஒழித்துவிட முடியாது!
ருஷ்டீ, உனக்கு மரணமில்லை. நீ நலம் பெற்று மீண்டெழுவாய்!