- எத்திராஜ் அகிலன்
உங்கள் ஆழ்வாரும் நரியும் கட்டுரை படித்தேன். அது சம்பந்தமாக டிம் ஜே மேயர்ஸ் எழுதிய கடிதமும் படித்தேன்
மிகவும் பண்புடன் தனது பதிலை டிம் ஜெ மேயர்ஸ் பதிவிட்டிருக்கிறார். அவரோடு நூறு சதம் என்னால் உடன்பட முடியாமல் போனாலும், அவருடைய தீர்க்கமான கருத்துகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். கலாச்சாரக் கூறுகளின் சங்கமம் எனும் போர்வையில் திமிங்கிலங்கள் சிறு மீன்களை விழுங்கிச் செரித்துக் கொழுப்பதைக் கையறு நிலையில் நாம் பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து உங்கள் இலக்கியப் பார்வைகள் சர்வதேச கவனம் பெறட்டும் சித்தார்த்தன்.
அன்பும் வணக்கமும்.
எத்திராஜ் அகிலன்
***
அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
நீங்கள் தொடர்ச்சியாக என் எழுத்தியக்கத்தை பாராட்டி உற்சாகமும் உத்வேகமும் அளித்து வருகிறீர்கள்.
தமிழின் நவீன கலை இலக்கியச் சூழலில் ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு ஆளுமையாக விளங்கும் உங்கள் பாராட்டுக்கள், எனக்குள் பெரும் உத்வேகத்தை ஏற்றுகின்றன. உங்கள் நட்பு எனக்குப் பெரும் பலம்.
அன்புடன்
கௌதம்
***