• Sat. Mar 25th, 2023

தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது : அறிவிப்பு.

ByGouthama Siddarthan

Jul 31, 2022
  • விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நண்பர்களே,

இது இன்னும் ஒரு விழாவுக்கான அழைப்பு. வரும் 14.8.22 ஞாயிறு அன்று தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது ஈரோட்டில் சென்னிமலை சாலையில் உள்ள ராஜ் மகால் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இது முதல் விருது விழா ஆகும். இந்த விருதை கரசூர் பத்ம பாரதி அவர்களுக்கு அளிக்க இருக்கிறோம். விழா நாள் காலை 10.30 மணி துவங்கி மாலை 4 மணி வரை ஆய்வுத் துறையில் பங்காற்றும் நான்கு நூலாசிரியர்கள் உடன் நான்கு அமர்வுக்களாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விருது விழா மாலை 6 முதல் 8 வரை நடைபெறும்.

விழாவுக்கு மலேசியா கூலிம் ஆசிரமத் தலைவர் ஸ்வாமி பிரம்மானந்தா, அ கா பெருமாள், நாஞ்சில் நாடன், சோ தர்மன், ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் வருகை தருகிறார்கள். ஜெயமோகன் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 வரை ஈரோட்டில் இருப்பார்.

ஆகஸ்ட் 13 மாலையே மண்டபம் விழா கோலம் பூண்டு விடும். அனைவரையும் விழாவுக்கு அழைக்கிறோம்.

ஆகஸ்ட் 13 சனிக்கிழமை இரவு மண்டபத்தில் தங்க விரும்புவோர் தங்கள்,

பெயர் :
வயது :
ஊர் :
தொழில் :
செல் பேசி எண் :

ஆகியவற்றை குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உணவு, தங்குமிடம் போன்ற முன் ஏற்பாடுகளை செய்ய இந்த முன் பதிவு எங்களுக்கு உதவும். பெண்களுக்கு தனி அறைகள் உண்டு.

மணவாளன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
+91 6382 343 470
azhaindian@gmail.com
……..

குறிப்பு : விழாவில் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும். புத்தகங்களை முன்பே பணம் செலுத்தியும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

புத்தக முன் பதிவு தொடர்புக்கு :

மீனாம்பிகை,
விஷ்ணுபுரம் பதிப்பகம்
90802 83887

***

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page