- கௌதம சித்தார்த்தன்
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
என் மோட்டார் சைக்கிளின் மீது மோதிய காரின் விசையில்
அந்தரத்தில் தூக்கி எறியப்பட்டேன்
கிணுங் என்ற ஓசை!
அந்தரவெளியில் எறியப்பட்ட என் உடலில் அக்கணம்
மோதி உடைகிறது கண்ணாடி வளையல் ஒன்று.
மாதுளைமணிகளாய் சிதறும் கண்ணாடி முத்துக்கள்
என் முகமெங்கும் அளைவுறுகின்றன.
அக்கணம், காலத்தின் இயக்கம் சமைந்து நிற்கிறது.
அப்படியப்படியே போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
சகல ஜீவராசிகளின் இயக்கமும் உறைந்து நிற்க,
காலத்தின் இடையறாத நகர்வை ஒருகணம் நிறுத்தி வைத்த
வளையல் துண்டுகளில் திரைந்திருந்த காலத்தின் நினைவுகளிலிருந்து எழுகிறாய் நீ.
என் பதின் பருவ இதழ் குவித்து முத்தமிட்ட
உன் அதரங்களின் செம்மணி நிறம்
அந்த வெளியெங்கும் கப்பி நிற்கிறது.
உன் கன்னக் கதுப்பில் ஓடிய செவ்வரிகள்
பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டங்களாக
வளையல் துண்டுகளில் அளைவுறுகின்றன.
பீத்தோவனின் இரண்டாவது சொனாட்டா
என் குரல்வளையை இறுக்குறது.
இப்போது நீ
வேரா என்கிற பாத்திரமாக மாறி உள்ளே நுழைகிறாய்.
மரணம் கவிந்திருந்த என் தலையைப் பற்றியெடுத்து
நிமிர்த்தி
அசைவுறாக் கண்களை அகத்துப் பார்க்கிறாய்.
கேள், சிம்பொனி நடுங்கி ஒலிர்வதை.
அக்கணம் என் விழிகள் கண் சிமிட்டி ஒளிர
அவ்வொளிர்வில்
நீ கனவு காண்கிற காதலும்,
நான் காதல் செய்கிற கனவும்
ஒரு வண்ணத்தியாக மாறிப் பறக்கிறது.
இப்பொழுது என் நெற்றியில் முத்தமிடுகிறாய்
பிரபஞ்சமெங்கும்
மகரந்தச் சூல்களோடு மலர்கள் அலர்கின்றன.
************
குறிப்பு : அலெக்சாந்தர் குப்ரின் எழுதிய அமரத்துவ காவியம் ‘செம்மணி வளையல்’. வேரா என்கிற பெண்ணின் மீதான ஒரு தலைக்காதலில் துயருறும் நாவலின் நாயகன் செல்ட் கோவ், அவள் திருமணமான பின்னும் விடாமல் தன் காதலைத் தொடர்கிறான். இறுதியில், பீத்தோவனின் இரண்டாவது சொனாட்டா வை அவளுக்கு சமர்ப்பணம் செய்து, ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். படுக்கையில் மரணித்துக் கிடக்கும் அவனின் தலையை ஏந்தி அவன் நெற்றியில் முத்தம் பதிக்கிறாள் வேரா. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மையில் நடக்கும் இது போன்ற உண்மையான காதலை, மறுமையில் ஒன்றிணைக்கும் இசைச் சக்தி (power of music) கொண்டதாக காலங்களற்று பாடிக் கொண்டேயிருக்கிறது இசை. அதுதான் இரண்டாவது சொனாட்டாவின் தாத்பர்யம்.
****
இந்தக் கவிதை எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, Timebyrinth என்ற என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. மேலும் ஜெர்மன், ரோமானியன், பல்கேரியன் ஆகியமொழிகளில் வெளியான என் கவிதைத் தொகுப்புகளிலும் உள்ளது. ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளின் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.
****
The Garnet Bracelet
That miracle happened
Within the time of
Blinking the eyes:
By the impact of the car
That collides with my motorcycle
I am thrown up in the air.
A tinkling sound!
At that moment
A glass bangle
Hits against my body
That is thrown up in the air.
The glass beads that scatter in the air
As pomogranate gems
Mingle with my face.
At that moment
The motion of time suddenly freezes,
The traffic becomes paralyzed.
The movement of
All the living creatures becomes frozen,
You emerge from the memories
Of the time that was furrowed
In the pieces of the bangles
That stopped the perennial motion
Of Time.
The garnet colour of your lips
That were once kissed by
My adolescent lips
Cover the entire space.
The reddish marks that groove
Through your plumb cheeks
Are mingling with the beads of the bangle.
Beethoven’s second sonata
Strangles my throat.
Now you become Vera
And, bracing yourself, enter here.
At once you take
A big red rose from the side pocket
Of your jacket.
With your left hand
You slightly raise my head
Which is shrouded by death.
And with your right hand
You put the flower
Under my neck.
Seeing through
My frozen, closed eyes
You push aside
The hair on my forehead.
Listen, Vera, to the trembling sound
Of the symphony.
At that moment
My eyes glitter with blinking
And in that brightness
The love you always dream about
And the dream I always love
Metamorphosize into one butterfly
Which flies fluttering in the air.
Now you clutch my temples
With your hands
And put your lips
To my cold, moist forehead
In the eternal, affectionate kiss.
The flowers bloom
With pollen landed in the ovules
All over the Universe.
****
Translator’s Note:
“The Garnet Bracelet” is the immortal short novel by the Russian writer Alexander Kuprin, first published in 1911. The plot of the story, which was first started by the author as a short story, is about a minor telegraph clerk named Zheltkov who hopelessly and selflessly fell in love with Vera, the wife of a governor, a rich society lady hardly aware of his existence. He presents a garnet bracelet, a very expensive gift, for her birthday. Later he comes to know that the only thread which connects him with his love is gone, and commits suicide. In the final letter he asks Vera to listen to Beethoven’s Second Piano Sonata. The power of the sonata makes her realize that she has been just brushed by “this rarest thing, a true love that happens once in a thousand years.” Maxim Gorky praised the short novel as “the sign of a new literature coming.”
*******
Translated by
S. Balachandran
*********