- கபோர் க்யூகிக்ஸ்
- தமிழில் : கௌதம சித்தார்த்தன்
இறந்த தேவதையின் சிறகுகளின் கீழ்
சந்திரன் காதலிக்கிறாள்
சூரியனை
அவர்களது உடலின் எதிர்ப்பிரதி பற்றிப் படர்கிறது.
ஆற்றுப்படுகையில் அளைபடும்
மலைத்தொடரிலும்
புழுதிச் சாலையில் படியும்
உங்கள் கால்தடத்தின்
ஒவ்வொரு பள்ளத்திலும்
எதிர் வால்நட் மரத்தின் வழியே
நீங்கள் காண்பீர்கள்
சந்திரனின் ஒரு பகுதியை
மற்றும் வெகு தொலைவில்
பிளம் மரத்தின் கீழ்
பளபளக்கிறது
சூரியனின் உடைந்த பகுதி.
பீட் கவிஞர் வரிசையில் வரும் கபோர் க்யூகிக்ஸ் (Gabor Gyukics 1958 – ) புகழ் பெற்ற ஹங்கேரிய அமெரிக்கக் கவிஞரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான இவர், இரு வழி மொழிபெயர்ப்பாளர் ஆவார். ஆங்கிலத்திலிருந்து ஹங்கேரிய மொழிக்கும், ஹங்கேரியனிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பதில் வல்லமை பெற்றவர். சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது கவிதைத் தொகுப்புகள், மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 30 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. ஹங்கேரியில், ஜாஸ் இசை கவிதை வாசிப்புகளை நிறுவி, பல நிகழ்வுகளை நடத்தியவர்.
இவர், கௌதம சித்தார்த்தன் கவிதை ஒன்றை ஆங்கில வழியாக ஹங்கேரி மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.